கணவரை பழிவாங்குவதற்காக முதல்வர் வீட்டுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த திருவில்லிபுத்தூர் கல்லூரி பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார். அவர் மீது 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதில் அங்கு பணிபுரியும் பெண் ஊழியர் வசந்தா என்பவரை பிடித்து விசாரித்தனர். அவரது கணவர் நாச்சிமுத்து. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். நாச்சிமுத்து தற்போது மும்பையில் வசிக்கிறார். வசந்தா தனது கணவரை பழிவாங்கும் நோக்கில் அவரது பெயரில் உருவாக்கப்பட்ட இ-மெயில் ஐடி மூலம் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு, மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு நாச்சிமுத்து (எ) முகமதுஜான் என்ற பெயரில் வெடிகுண்டு மிரட்டல் அனுப்பியது தெரியவந்தது.
இதையடுத்து கிருஷ்ணன்கோவில் சிறப்பு எஸ்ஐ ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் நேற்று அதிகாலை வசந்தாவை கைது செய்தனர். அவர் மீது கொலை மிரட்டல், தேசிய ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவித்தல், மதக் கலவரத்தை தூண்டுதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் என 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இ.மெயில் மிரட்டல் தொடர்பாக சென்னை போலீசாரும் வசந்தா மீது மூன்று பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment