Tuesday 8 May 2012

குமரி குடிமகன்களின் நாட்டு சேவை : ஏப்ரலில் மதுபான விற்பனை 54.35 கோடி

குமரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 29 நாட்களில் மட்டும் ரூ.54.35 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் 147 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. கோடை காலம் துவங்கி விட்ட நிலையில் நகர பகுதிகள் மட்டுமின்றி கிராம பகுதிகளிலும் டாஸ்மாக் மதுபான கடைகளில் மது பிரியர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
தற்போது மே மாதத்திலும் இந்த நிலை தொடருகிறது. குமரி மாவட்டத்தில் அவ்வப்போது சாரல் மழை பெய்தபோதிலும் வெப்பத்தின் தாக்கம் பெருமளவு குறையவில்லை.
பிராந்தி, பீர் வகைகள் பெட்டி பெட்டியாக காலியாகின. பிராந்தி வகைகளைவிட பீர் வகைகளில் விற்பனை அதிக அளவு நடந்து வருகிறது.
புதுப்புது சுவைகளில் பிராந்தி, பீர் வகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் மதுபிரியர்கள் சளைக்காமல் வாங்கி குடிக்கின்றனர்.ஏப்ரல் மாதம் மகாவீர் ஜெயந்திக்காக ஒரு நாள் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. அன்று மட்டும் விற்பனை நடைபெறவில்லை. அதற்கு முதல்நாள் பெட்டி பெட்டியாக மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்தும் பல இடங்களில் விற்பனை நடந்தது. இதற்காக பலர் போலீசார் சோதனையில் சிக்கி கைது செய்யப்பட்டிருந்தனர்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இதர 29 நாட்களிலும் சேர்த்து ரூ.54 கோடியே 35 லட்சத்திற்கு மதுபானங்கள் விற்பனை நடந்துள்ளது. 1 லட்சத்து 36 ஆயிரத்து 218 பெட்டிகள் பிராந்தி வகைகளும், 51 ஆயிரத்து 710 பெட்டிகள் பீர் வகை களும் விற்று தீர்ந்துள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை காட்டிலும் 6850 பெட்டிகள் பிராந்தி வகைகள் அதிகம் விற்றுள்ளன.
27 ஆயிரத்து 168 பெட்டி கள் பீர் அதிகம் விற்று தீர்ந்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் பெருமளவு தட்டுப்பாடின்றி பிராந்தி, பீர் வகைகள் கிடைத்ததால் குமரி மாவட்டத்தில் மதுபான வகைகள் விற்பனை அதிகரித்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment