Tuesday, 8 May 2012

ஒரே டிக்கெட் : பஸ், புறநகர் ரயில், பறக்கும் ரயிலில் பயணிக்கலாம்

SINGLE-PASS-FOR-MTC-METRO-TRAIN-CHENNAIபஸ், புறநகர் மின்சார ரயில், மெட்ரோ, பறக்கும் ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே பயணச்சீட்டு முறையை கொண்டு வர "ஒருங்கிணைந்த சென்னை மாநக போக்குவரத்து" என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக முதல்வர் கூறினார்.
சட்டப்பேரவையில் நேற்று போக்குவரத்துத்துறை மானிய கோரிக்கை மீது நடந்த விவாதத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:
சிதம்பரம் பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்):
நகரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு வாகனங்கள் பெருக்கமும் ஒரு காரணமாகும். இதை கருத்தில் கொண்டு நீர்வழி, மெட்ரோ, மோனோ ரயில் என்று பொது போக்குவரத்தை ஊக்கப்படுத்த வேண்டும். நீண்டதூரம் செல்லும் அரசு பஸ்களில் தரத்தை அதிகரிக்க வேண்டும்.
அமைச்சர் செந்தில் பாலாஜி:
100 சதவீத பஸ்களும் புதிய பஸ்களாக மாற்றப்படும். புதிய பஸ்கள் வந்தபிறகு தனியாருக்கு இணையாக அரசு பஸ்களும் இயங்கும்.
முதல்வர் ஜெயலலிதா:
2012-13ம் ஆண்டு வரவு-செலவு திட்டத்தில் ரூ 750 கோடி மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. "ஒருங்கிணைந்த சென்னை மாநகர போக்குவரத்து" அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பஸ், புறநகர் ரயில், பறக்கும் ரயில், மோனோ ரயில், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு பொது போக்குவரத்து வசதிகளை ஒருங்கிணைப்பதே இதன் நோக்கமாகும். இவை அனைத்துக்கும் ஒரே பயணச்சீட்டு முறை கொண்டு வரப்பட்டு, பஸ், ரயில்களில் மக்கள் தடையின்றி எளிதாக பயணம் செய்ய முடியும்.
பாலகிருஷ்ணன்:
8ம் வகுப்பு படித்தால்தான் கனரக வாகனம் ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும் என்றுள்ள விதியை தளர்த்த வேண்டும்.
அமைச்சர் செந்தில் பாலாஜி:
இது மத்திய அரசு கொண்டு வந்த சட்டம். விதியை தளர்த்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் எழுதப்பட்டுள்ளது. மாற்று வழிகளை அரசு ஆராய்ந்து வருகிறது.
பாலகிருஷ்ணன்:
டூரிஸ்ட் டாக்சிக்கு புதிதாக போட்டுள்ள ஆயுள் வரி கட்டண உயர்வை குறைக்க வேண்டும்.
அமைச்சர் சி.வி.சண்முகம்:
அண்டை மாநிலங்களில் தமிழகத்தைவிட 10 மடங்கு வரி அதிகம்.
அமைச்சர் செந்தில் பாலாஜி:
6 சதுர மீட்டருக்குள் உள்ள வாகனத்துக்கு எந்த மாற்றமும் இல்லை. அதற்கு மேல் கூடுதல் 8 சதுர மீட்டர் உள்ள வாகனத்துக்கு காலாண்டுக்கு ரூ 420 வரி கட்ட வேண்டும். இதே கட்டணம் ஆந்திராவில் ரூ 630 ஆக உள்ளது. கர்நாடகாவில் ரூ 700 ஆக உள்ளது. ஆட்டோ போன்ற மக்கள் பயணம் செய்யும் சிறிய வாகனங்களுக்கு வரி விதிப்பில் எந்த மாற்றமும் இல்லை.

No comments:

Post a Comment