Thursday, 10 May 2012

"பணம் இருந்தால் கடவுளும் வீடு தேடி வருவார்"

சட்டப்பேரவையில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:
** ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி, காஞ்சிபுரம் தேவராஜசுவாமி, ஏகாம்பரேஸ்வரர், ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், ராமநாதபுரம் ஆதிஜெகன்னாதபெருமாள், கும்பகோணம் சாரங்கபாணி ஆகிய கோயில்கள் உள்ளிட்ட 43 கோயில்களுக்கு ரூ 22.50 கோடி வழங்கி திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
** திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பாதையில் பக்தர்கள் மனதை ஒருமுகப்படுத்தும் வகையில் இறை வாசகங்கள் அடங்கிய பலகைகளும், ஸ்லோகங்கள் மற்றும் பதிகங்கள் ஒலிபரப்பிட ஒலிபெருக்கி வசதி ஏற்படுத்தப்படும்.
** யானைகள் பராமரிப்பை மேம்படுத்த 46 கோயில்களுக்கு புதிதாக உதவி பாகன்கள் தொகுப்பு ஊதியத்தில் நியமிக்கப்படுவார்கள்.
** அன்னதான திட்டத்திற்கு நன்கொடை அளிப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் குறைந்தபட்சம் ரூ 7 லட்சம் நன்கொடை வழங்கினால் தம் குடும்பத்துடன் தமிழகத்தின் அனைத்து கோயில்களிலும் விழா காலங்கள் நீங்கலாக பிற நாட்களில் முன்னுரிமை அடிப்படையில் தரிசனம் செய்யும் வகையில் அவர்களுக்கு "வைர அட்டை" வழங்கப் படும்.
** கோடிக்கும் மேல் நன்கொடை வழங்குபவர்களுக்கு "பிளாட்டினம் அட்டை" வழங்கப்படும். இவர்கள் கோயில் உயர் கட்டண குடில்களில் கட்டணமின்றி தங்க அனுமதிக்கப்படுவார்கள். இத்திட்டம் ஸ்ரீரங்கம், திருச்செந்தூர், பழனி, திருத்தணி உள்ளிட்ட 15 கோயில்களில் முதல் கட்டமாக நடைமுறைப்படுத்தப்படும்.

No comments:

Post a Comment