Friday 11 May 2012

நிதானம் (பொறுமை) தேவை : நிதானத்தை இழந்தால்???

ஓடும் ரயிலில் டிக்கெட் எடுக்காத பெண் பயணியை, அபராதம் கட்ட சொன்ன பெண் பரிசோதகரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
chennai-electric-train-route
சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு பரிசோதகராக இருப்பர் சசிரேகா (30). இவர், மாம்பலம் ரயில்வே பாதுகாப்பு படையினரின் துணையுடன், சென்னை கடற்கரை& தாம்பரம் இடையிலான மின்சார ரயிலில், பயணிகளிடம் பயணச்சீட்டு இருக்கிறதா என்று ஒவ்வொரு பயணியாக நேற்று காலை விசாரித்து கொண்டிருந்தார்.
அதே ரயலில் பெண்கள் பெட்டி ஒன்றில், கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ரோசிகா (22) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் பயணம் செய்தார். இவர் பெரம்பூரில் தனியார் விடுதியில் தங்கி, மாம்பலத்தில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
நுங்கம்பாக்கம் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது, ரோசிகாவிடமும் சசிரேகா டிக்கெட்டை காட்டுமாறு கேட்டுள்ளார். அதற்கு, �நான் அவசரத்தில் டிக்கெட் எடுக்காமல் ஏறிவிட்டேன்� என்று ரோசிகா தெரிவித்துள்ளார். அதற்கு சசிரேகா, ‘பரவாயில்லை; 250 ரூபாய் அபராதம் கட்டுங்கள்’ என்றார். ‘ஆறு ரூபாய் டிக்கெட்டுக்கு 250 ரூபாய் அபராதமா? என்னால் கட்ட முடியாது’ என்று ரோசிகா மறுத்தார்.
இதுதொடர்பாக, இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் கோபமான ரோசிகா, சசிரேகாவை அடித்துள்ளார். உடன் வந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் ரோசிகாவை பிடித்து எழும்பூர் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சசிரேகா அளித்த புகாரின் பேரில், ரோசிகாவிடம் விசாரித்தனர். அப்போது, சசிரேகாவை அடித்ததை ரோசிகா ஒப்புக் கொண்டார். இதையடுத்து, அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment