கொல்கத்தாவை சேர்ந்த இந்திய கப்பல் கழக ஊழியருக்கும், மும்பையை சேர்ந்த பெண்ணுக்கும் 2000ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 9 வயதில் பெண் குழந்தை உள்ளது.
திருமணத்துக்கு பிறகு கணவர் மும்பையில் 5 ஆண்டுகள் கப்பலில் வேலை செய்தார். 2005ம் ஆண்டு போர்ட் பிளேயருக்கு மாற்றப்பட்டார். அங்கு தன்னுடன் வந்த வாழும்படி மனைவியை அவர் அழைத்தார். ஆனால், மனைவி மறுத்து விட்டார். இதையடுத்து, அவரிடம் இருந்து விவாகரத்து கோரி கணவர் வழக்கு தொடர்ந்தார்.
மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மஜும்தார், அனூப் மேத்தா அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், "ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் இருந்தார். அவர் காட்டுக்கு புறப்பட்டு சென்றபோது சீதையும் அவரை பின் தொடர்ந்து காட்டுக்கு சென்றார். மனைவி என்பவள் சீதையை போல இருக்க வேண்டும்" என்றனர்.
முன்னதாக குழந்தையின் நலனை கருதியாவது கணவனும், மனைவியும் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுரை கூறினர். அதற்கு கணவர் சம்மதித்தார். ஆனால், மனைவி மறுத்து விட்டார். இதையடுத்து, விசாரணையை ஜூன் 21ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
No comments:
Post a Comment