சாப்பாட்டுக்கு பணம் கொடுக் காமல், ஒரு ஏக்கர் நிலத்தை எழுதி தருமாறு தந்தையை அடித்து துன்புறுத்திய மகனை போலீசார் கைது செய்தனர்.
சேலம் வீராணம் பக்க முள்ள அடிமலைப்புதுரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (70). இவரது மனைவி ஆண்டி யம்மாள். இவர்களின் மகன் அண்ணாமலை (48). இவர் காரைக்காலில் உள்ள எண்ணெய் எரிவாயு கழகத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவரது தந்தை மாரியப்பன் சேலம் மாவட்ட எஸ்பி முத்து சாமியை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். மனுவில் அவர் கூறியிருப்ப தாவது:
எனது மகனை மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத் தேன். தற்போது நல்ல வேலையில் இருக்கிறார். ஆனால் நானும் எனது மனைவியும் சாப்பிட ஒரு பைசா கூட தருவதில்லை. இதனால் நாங்கள் ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து குடும்பம் நடத்தி வருகிறோம். ஆனால், அந்த நிலத்தையும் எழுதி கொடுக்குமாறு அடித்து துன்புறுத்துகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் மாரியப்பன் குறிப்பிட்டி ருந்தார்.
இதில் விசாரணை நடத்த, இரும்பாலை இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமாருக்கு எஸ்பி உத்தர விட்டார். இதையடுத்து, மகன் அண்ணாமலையை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
* நானும் எனது மனைவியும் கஷ்டப்பட்டு மகனை படிக்க வைத்தோம்.
* எங்களது மகன் தற்போது நல்ல வேலையில் இருக்கிறார்.
* எங்கள் சாப்பாட்டுக்கு ஒரு பைசா கூட தருவதில்லை.
* தள்ளாத வயதிலும் எங்களது ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வாழ்கிறோம்.
* இப்போது, அந்த நிலத்தையும் எழுதிக் கொடுக்குமாறு அடித்து துன்புறுத்துகிறார்.
* அதனால், எங்கள் மகன் மீது நடவடிக்கை எடுக்கு வேண்டும் என்கிறார் தந்தை.
No comments:
Post a Comment