தண்ணீர், மின்சாரத்தை சமமாக பங்கிட வேண்டும்
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும்போது, தமிழகம் & கேரளாவுக்கு தண்ணீர், மின்சாரத்தை சமமாக பங்கிட அனுமதிக்க வேண்டும் என்று கேரளா கூறியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவிடம் கேரள அரசு நேற்று தாக்கல் செய்த 2-வது அறிக்கையில் கூறி இருப்பதாவது:
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும்போது அந்த அணையில் உள்ள தண்ணீரையும், மின்சாரத்தையும் சமமாக பங்கீடு செய்வதற்கு கேரளாவுக்கு உரிமை வேண்டும். தமிழ்நாடு முல்லைப் பெரியாறு அணை தண்ணீரை உபயோகித்து உற்பத்தி செய்யும் மின்சாரத்தில் கேரளாவுக்கும் உரிமை உண்டு. அணை பலவீனமாக இல்லாவிட்டாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக அணையில் இருந்து தண்ணீர் முழுவதையும் வெளியேற்றி அதன் செயல்பாட்டை நிறுத்தி வைக்கவும், புதிய அணையில் மீன் பிடிக்கவும், சுற்றுலாவுக்கு பயன்படுத்தவும் கேரளாவுக்கு உரிமை வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment