பொங்கல் விழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் தமிழகம் முழுவதும் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரையில் மொத்தம் 5000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. இதேபோல், சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு மக்கள் செல்லும் வகையில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து 3000 சிறப்பு பஸ்களும் இயக்கப்படவுள்ளன.
சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல தென் மாவட்டங்களுக்கு சென்னையில் இருந்து 4 சிறப்பு ரயில்களும், மேற்கு மாவட்டங்களுக்கு 2 சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. ஒரு சிறப்பு ரயில் நேற்று இரவு புறப்பட்டு சென்றது. இன்று பிற்பகல் பயணிகள் ரயில் புறப்படுகிறது. பஸ்களில் கட்டணங்கள் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதால், ரயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் வழக்கமாக இயக்கப்படும் ரயில்களிலும் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment