Thursday, 12 January 2012

அமெரிக்க தூதரக ஆபீசில் தமிழ், இந்தி, மலையாளதில் விசாரணை

இந்திய, அமெரிக்க தொழில் வர்த்தக சபை சார்பில் அமெரிக்க விசா பெறுவது தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி, கோவையில் நேற்று நடந்தது. சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி நிக்கோலஸ் மேன்ரிங் பேசிய தாவது:
உலகில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் சென்னையில் உள்ள தூதரகம் 10&வது மிகப்பெரிய தூதரகமாகும். கடந்த ஆண்டு மட்டும் இங்கு 1.75 லட்சம் விசா வழங்கப்பட்டுள்ளது.
முன்பு விசா பெற 30 முதல் 60 நாள் வரை காத்திருக்க வேண்டும். தற்போது குறைந்தபட்சம் 24 மணி நேரத்திலும், அதிகபட்சம் 7 நாட்களிலும் விசா வழங்கப்படுகிறது.
அமெரிக்கா செல்ல விசா கேட்டு இந்தியர்கள்தான் அதிகளவில் விண்ணப்பிக்கின்றனர். புதிதாக ஐதராபாத்தில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட உள்ளது. 6 மாதம், 2, 3 மற்றும் 5 ஆண்டு விசா அனுமதிக்கப்படுகிறது. இந்திய மாணவர்கள் ஆண்டுக்கு 8 ஆயிரம் பேர், படிப்பதற்காக அமெரிக்கா செல்கின்றனர்.
ஆண்டுதோறும் 1 லட்சம் இந்தியர்கள் அமெரிக்கா சென்று வருகின்றனர். 8 வகை பிசினஸ் விசா வழங்கப்படுகிறது. விசா கேட்டு விண்ணப்பம் செய்தவர்கள், விசாரணைக்காக தூதரகம் வரும்போது, அதிகாரிகளின் கேள்விக்கு ஆங்கிலத்தில் பதில் அளிக்க வேண்டி உள்ளது. இவ்வாறு பதில் அளிக்கும்போது தவறு ஏற்பட்டு விடுகிறது. தெரிந்த மொழியில் கேட்டால் சரியாக பதில் அளிப்பர். எனவே தமிழ், இந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் கேள்விகள் கேட்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் தவறுகள் நடப்பது தவிர்க்கப்படுகிறது.
இவ்வாறு மேன்ரிங் பேசினார்.

No comments:

Post a Comment