உடம்பில் வரிகள் கொண்ட காட்டு பூனையை, புலி என கூறி ரூ.10 லட்சத்துக்கு விற்க முயன்ற 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் வாய்ப்பாடி வனப்பகுதியில் சிலர் புலிக்குட்டியை விற்க முயற்சிப்பதாக கிடைத்த தகவலின்பேரில், வனத்துறையினர் அங்கு சென்றனர். சந்தேகத்துக்கிடமாக நின்ற 2 பேரிடம் நைசாக பேச்சு கொடுத்தபோது, தங்களிடம் புலிக்குட்டி இருப்பதாகவும்,
அதன் விலை ரூ.10 லட்சம் என்றும் பேரம் பேசினர்.
அதன் விலை ரூ.10 லட்சம் என்றும் பேரம் பேசினர்.
வனத்துறையினர் புலிக்குட்டியை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். அது புலிக்குட்டி அல்ல. காட்டில் காணப்படும் ஒரு வகை சிறுத்தை பூனை என தெரிந்தது. அதை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். 2 பேரையும் கைது செய்து விசாரித்தனர். அவர்கள் கோவை மாவட்டம் துடியலூர் விநாயகர் கோயில் வீதியை சேர்ந்த சுப்பிரமணி (60), திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சுக்காபேட்டையை சேர்ந்த மகேஸ்வரன் (55) என தெரியவந்தது.
வனத்துறையினர் கூறுகையில், “இது ‘சிவிக் கேட்’ எனப்படும் சிறுத்தை பூனை. குறிப்பிட்ட அளவுக்கு மேல் வளராது. வனத்தில் மட்டுமே காணப்படும். மரத்துக்கு மரம் வேகமாக தாவும். இது புலி இனத்தை சேர்ந்தது அல்ல. ரூ.10 லட்சத்துக்கு விற்க முயன்று பேரம் படியாததால் கோவைக்கு கொண்டு செல்ல முயன்றுள்ளனர்” என்றனர்.
மேலும் சிறுத்தை தோல் வைத்திருந்த கோவை காரமடையை சேர்ந்த வெள்ளியங்கிரி (27), கிருஷ்ணசாமி (67), பெருந்துறையில் சிறுத்தை நகம் வைத்திருந்த துடியலூரை சேர்ந்த சக்ரபாணி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment