Friday, 10 February 2012

பாகிஸ்தானில் 13000 ஆபாச வெப்சைட்டுக்கு தடை


பாகிஸ்தானில் 13 ஆயிரத்துக்கும் அதிகமான ஆபாச வெப்சைட்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்ப செயலர் நவாப் லியாகத் அலிகான் நேற்று கூறியதாவது:
இன்டர்நெட்டில் ஏராளமான ஆபாச வெப்சைட்கள் வலம் வருகின்றன. இதனால் பெரும் பிரச்னை ஏற்படுகிறது. எனவே, 13 ஆயிரத்துக்கும் அதிகமான ஆபாச வெப்சைட்கள் உடனடியாக தடை செய்யப்பட்டுள்ளன. எனினும், எல்லா ஆபாச வெப்சைட்களையும் அரசால் தடுக்க முடியவில்லை. இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இணைய தளத்தில் ஆபாச படங்கள் செய்திகள் குறித்த புகார்கள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இன்டர்நெட்டில் ஆபாசங்களை தடுக்க, தானியங்கி முறையில் தணிக்கை செய்யும் தொழில்நுட்பத்தை இந்தியாவும் சீனாவும் அமல்படுத்தி வருகின்றன. இந்த தொழில்நுட்பத்தை கொண்டு வர அதிக செலவாகும். அப்படியே இந்த தொழில்நுட்பத்தை புகுத்தினாலும், எல்லா ஆபாச வெப்சைட்களையும் தடுக்க முடிவதில்லை. பெரும்பாலான வெப்சைட்கள் வெளிநாடுகளை சேர்ந்தவையாக இருப்பதால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க முடிவதில்லை.
எனினும், பேஸ்புக், யூ டியூப் போன்றவற்றுக்கு பாகிஸ்தான் அரசு தடை கொண்டு வந்தது. அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், ஆபாச வெப்சைட்களை மட்டும் தடை செய்ய முடிவெடுக்கப்பட்டது.
இவ்வாறு நவாப் லியாகத் கூறினார்.

No comments:

Post a Comment