Friday, 10 February 2012

ஸ்லிம்மான போட்டோ அனுப்பி ஏமாற்றி விட்டார் : இயக்குனர்

நடிகை நிகோல் பப்ளிமாஸ்போல் ஊதிவிட்டார். ஒல்லியான போட்டோ அனுப்பி ஏமாற்றி நடித்தார் என்றார் இயக்குனர்.
நடிகைகளின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘ஒரு நடிகையின் வாக்குமூலம்’. ராஜ் கிருஷ்ணா இயக்கி இருக்கிறார். அவர் கூறியதாவது:
ஒரு நடிகையின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இக்கதை உருவாக்கப்பட்டிருந்தாலும் இது யாருடைய நிஜ வாழ்வையும் மையமாக கொண்டது அல்ல. நடிகைகளைப்பற்றி எடுத்ததால் எனக்கு திரையுலகில் எதிர்ப்பு கிளம்பும் என்கிறார்கள்? போலீஸ், ரவுடி கதைகளை களமாக கொண்ட படம்போல் இது நடிகையை களமாக கொண்ட படம். இதில் எதிர்ப்பு தெரிவிக்க ஒன்றுமில்லை. இதில் சோனியா அகர்வால் ஹீரோயின். சரியான நேரத்துக்கு வந்து முழுஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். இதேபடத்தில் மற்றொரு கதாபாத்திரத்துக்கு நடிகை தேடினேன். நிகோல் பெயரை ஒருவர் பரிந்துரைத்தார். போட்டோ அனுப்ப சொன்னேன். ஒல்லியாக வேடத்துக்கு பொருத்தமாக இருந்தார். ஆனால் அவர் ஷூட்டிங்கிற்கு வந்தபோது பயந்துவிட்டேன். பப்ளிமாஸ்போல் ஊதிவிட்டிருந்தார். வேறு வழியில்லாமல் நடிக்க வைத்தேன். எப்போதோ ஒல்லியாக இருந்தபோது எடுத்த போட்டோவை அனுப்பி ஏமாற்றிவிட்டார். மேலும் ஷூட்டிங்கில் ஒத்துழைப்பு தரவில்லை. கொடுத்த காஸ்ட்யூமை அணிய மறுத்தார். அவருக்கு சோனியாவுடன் பல காட்சிகள் இருந்தது. அதில் அவர் நடிக்கவில்லை. 15 காட்சிகளை இதனால் படமாக்க முடியவில்லை. இப்படியொருவரை நான் பார்த்ததில்லை. நான் அவரிடம் ஆபாசமாக பேசியதாக பேட்டி தருகிறார். ஷூட்டிங்கிற்கே பல நாட்கள் வராத அவரிடம் எனக்கு கோபம்தான் இருந்தது. படத்தை முடிக்கும் பிஸியில் யாரிடமும் வேறு பேச்சு பேச நேரம் இல்லை.
சம்பள பாக்கி இருப்பதாக நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அவர் இதுவரை நடித்த எல்லா பட தயாரிப்பாளர்கள் மீதும் இப்படித்தான் புகார் கொடுத்திருக்கிறார். இவ்வாறு ராஜ் கிருஷ்ணா கூறினார்.

No comments:

Post a Comment