அணுமின் நிலையம் கூடாது என்ற ஒத்த கருத்துள்ள இயக்கங்கள் இணைந்து வரும் 26ம் தேதி சென்னையில் மாநாடு நடத்த திட்டமிட்டுள் ளோம்.
அன்று மாலை மயிலை மாங்கொல்லையில் பொதுக்கூட்டமும் நடைபெறும். இந்த கூட்டத்தில் ராமதாஸ், வைகோ, திருமாவளவன், பழ.நெடுமாறன், சீமான் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
கூடங்குளம் அணுமின் நிலைய போராட்ட குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறியதாவது:
தமிழக அரசின் சார்பில் நிபுணர் குழு அமைத்துள்ளதற்கு நன்றி.
எங்களது போராட்டத்துக்கு அமெரிக்கா நிதி உதவி செய்வதாக புகார் கூறுகின்றனர். தவறான நிலையில் பணம் வந்தால், எங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு உதயகுமார் கூறினார்.
No comments:
Post a Comment