Monday 13 February 2012

ரேஷன் அட்டையில் உள்தாள் இணைக்க 28ம் தேதி கடைசி நாள்


தமிழகத்தில் போலி கார்டுகளை ஒழிப்பதற்காக "ஸ்மார்ட் கார்டு" வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதற்கான பணிகள் முடிவடைய காலதாமதம் ஆகும் என்பதால், பழைய ரேஷன் கார்டுகளை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து அரசு அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் ரேஷன் கார்டில் உள்ள காலி பக்கத்தில் 2012ம் ஆண்டுக்கான சீல் அச்சிடப்பட்டு வருகிறது.
பகலில் பெரும்பாலானவர்கள் வேலைக்கு சென்று விடுவதால், கார்டை புதுப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, வேலைக்கு செல்பவர்களின் வசதிக்காக 4 வாரங்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் ரேஷன் கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. இதனால், நேற்று காலை முதல் ரேஷன் கடைகளில் கார்டுகளை புதுப்பிக்க கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நீண்ட வரிசையில் மக்கள் நின்று தங்கள் கார்டுகளை புதுப்பித்தனர்.
இருப்பினும், கார்டுகளை புதுப்பிக்காதோர் வரும் 28ம் தேதி வரை, கடைகளுக்கு சென்று தங்கள் கார்டுகளை புதுப்பிக்கலாம். 28ம் தேதிக்கு பின் னர் கார்டுகள் புதுப்பிக்கப்படாது.
அதன் பின்னர், புதுப் பிக்கப்படாத கார்டுகளுக்கு ரேஷனில் பொருட்கள் வழங்கப்படாது என்று உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment