ரயில் பயணிகளிடம் கட்டாய பண வசூல் செய்ததை கண்டித்த போலீசாரை திட்டி, சுற்றிலும் நின்று கும்மியடித்த 7 அரவாணிகளை போலீசார் கைது செய்தனர்.
கோவை வழியாக செல்லும் ரயில்களில் அரவாணிகள் ஏறிக்கொண்டு பயணிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும், கொடுக்காத பயணிகளை திட்டி ரகளை செய்வதாகவும் போலீசுக்கு புகார் வந்தது. குறிப்பாக எர்ணாகுளம் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், சென்னை எக்மோர்&மங்களூர் எக்ஸ்பிரசில் அரவாணிகள் தொல்லை அதிகரித்துவிட்டதாக புகார் வந்தது.
இதுகுறித்து நேற்று முன்தினம் எர்ணாகுளம் இன்டர்சிட்டி ரயிலில் வந்த பயணிகள் புகார் கூறவே, கோவை ரயில்வே போலீஸ் ஏட்டு சிவசந்திரன், போலீஸ்காரர் மதன்குமார் ஆகியோர் சென்று விசாரித்தனர். ஒரு பெட்டியில் இருந்த 7 அரவாணிகளை கீழே இறக்கி, பணம் வசூலிக்க கூடாது என கண்டித்தனர். உடனே, அரவாணிகள் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். கையை நீட்டி கண்டபடி திட்டியுள்ளனர். திடீரென போலீசாரை சுற்றிவந்து கும்மியடித்து ரகளை செய்தனர்.
இதையடுத்து, அரவாணிகள் கோவை கடலைகாரசந்தை சேர்ந்த மணி என்ற சோபனா (31), பெரியநாயக்கன்பாளையம் வீரபாண்டியை சேர்ந்த பாபு என்ற குழலி (28), உக்கடம் இளங்கோ என்ற அருணா (40), திருப்பூரை சேர்ந்த ரமேஷ் என்ற பத்மா (25), சுரேஷ் என்ற சுஷ்மிதா (25), சந்திரன் என்ற சந்திரா (32), ஷாஜகான் என்ற தஸ்லிமா (26) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 7 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment