Wednesday 4 April 2012

இன்று தொடக்கம் : பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு

பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வில் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் 10 லட்சத்து 84 ஆயிரத்து 575 மாணவ மாணவியர் எழுதுகின்றனர். தனித் தேர்வர்களாக 84379 மாணவ மாணவியரும் எழுதுகின்றனர்.
பத்தாம் வகுப்புக்கான தேர்வுகள் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் கேள்வித்தாள் படித்துப் பார்க்க 10 நிமிடம், விடைத்தாளில் பதிவு எண்களை எழுத 5 நிமிடம் என மொத்தம் 15 நிமிடங்கள் கூடுதலாக ஒதுக்கப்படுகிறது. மதியம் 12 மணி 45 நிமிடத்துக்கு தேர்வு முடியும். இன்று தொடங்கும் தேர்வுகள் 23ம் தேதி வரை நடக்கிறது. தமிழகம் புதுச்சேரியை சேர்ந்த 10312 பள்ளிகள் மூலம் 10 லட்சத்து 84 ஆயிரத்து 575 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். முதல் முறையாக இந்த ஆண்டு சமச்சீர் கல்வி முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறையின் கீழ் முதல் முறையாக 19574 மாணவ மாணவியர் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதுகின்றனர். தமிழ் வ ழியில் மட்டும் 7 லட்சத்து 87 ஆயிரத்து 374 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். இவர்கள் தவிர கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தோல்வி அடைந்த மாணவர்கள் இந்த ஆண்டும் பழைய பாடத்திட்டத்தின் கீழ் தான் தேர்வு எழுத வேண்டும். இதன்படி 64 ஆயிரத்து 805 மாணவ மாணவியர் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதுகின்றனர். மேலும், மாற்றுத் திறன் கொண்டு மாணவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. 52 சிறைக் கைதிகள் இந்த ஆண்டு தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக சென்னை புழல் சிறையில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களில் ஒழுங்கீனமாக நடந்து கொள்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு உதவியாக இருப்பது, ஊக்குவிப்பதில் பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளித் தேர்வு மையம் ரத்து செய்யப்படும். மேலும் பள்ளி அங்கீகாரத்தையும் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு மையங்களில் மின்சாரத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜெனரேட்டர் வசதிகள் பத்தாம் வகுப்பு தேர்வு மையங்களுக்கும் செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு மையங்கள் சுமார் 2900 இருந்தன. ஆனால் 10ம் வகுப்பு தேர்வு மையங்கள் 3033 மையங்கள். அதனால் பத்தாம் வகுப்பு தேர்வுக்கான செலவு கூடுதலாக இருக்கும்.

No comments:

Post a Comment