நாடு விடுதலை பெற்ற போது நம் நாட்டு மக்களின் சராசரி ஆயுள் வெறும் 32 வயது தற்போது 2011 கணக்கு எடுப்பின் படி 64 வயது. இந்த நிலைமை அப்படியே நம் ஊருக்கும் பொருந்தும் என்று தோன்றுகிறது. அந்த காலத்தில் வைசூரி எனப்படும் நோய் காலரா போன்ற கொள்ளை நோய்களால் அதிக இறப்பு இருந்துள்ளது.
சரியான மருத்துவ வசதி இன்மையால் குழந்தை மரணம் நாம் கற்பனை செய்ய முடியாத அளவு மிக அதிகம். நம் தாத்தா பாட்டிகளிடம் உடன் பிறந்தவர்கள் எத்தனை? பிழைத்தவர்கள் எத்தனை? தவறியவர்கள் எத்தனை? என்ற கேள்விகளை கேட்டால் உண்மை தெரியும். அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் வசதி அதிகமாக இல்லை. எல்லா நோய்களுக்கும் நாட்டு வைத்தியமே தீர்வாக இருந்தது. சிலகாலம் முன்புவரை வீட்டிலேயே பிரசவம் நடக்கும். மருத்துவச்சி எனப்படும் பெண்கள் இதை மேற்கொள்வர்
அரசாங்கம் சுகாதார களப்பணியாளர்களை நியமித்த பிறகு அரசு செவிலியர்கள் இந்த பணியை செய்தனர். கமலம் என்ற செவிலியை அவளவு எளிதில் நாம் மறக்க முடியாது. நம் ஊரில் அதிக பிரசவம் பார்த்தவர் இவராக இருக்கலாம்.
நமது ஊரில் இயல்பான பொருளாதார நிலைமைகள் மேம்பட்ட பிறகு நிலைமைகள் மாறின அதிக மருத்துவ மனைகள் அதிக வசதி கிடைத்தது. சிசு மரண விகிதம் படு வேகமாக குறைந்தது கொள்ளை நோய்கள் முற்றிலும் ஒழிந்தது. நம் ஊரிலேயே மருத்துவ மனைகள் வந்தன. நம் ஊரில் ஆலயத்திற்கு சொந்தமான திரு.சூசந்தோணி மேஸ்திரி நினைவு மருத்துவ மனை கன்னியர்களால் சிறப்பாக நடத்தப்பட்டது. குளச்சல், கருங்கல், நாகர்கோவில், ஆசாரிப்பள்ளம் என்று எண்ணற்ற வாய்புகள் கிடைக்கின்றன
எனினும் கடந்த 30 வருடங்களில் நம் ஊரில் கேன்சர் நோயால் இறந்தவர்கள் எண்ணிக்கை பற்றி எனக்கு கவனம் இருந்தது. இது பற்றி தகவல் அறியும் உரிமை சட்டப்படி பலமுறை கேட்டும் சரியான பதில் கிடைக்கவில்லை. நம் ஊரில் இது மிக அதிகம் என்று தெரிகிறது. நம் ஊரில் பிறந்த..அதிகமான மக்கள் (திருமணம் செய்து கொடுத்த பெண்கள் உட்பட). இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறாகள் என்பதை உறுதியாக நம்ப முடியும். தாமதமான குழந்தை பிறப்பு அல்லது குழந்தை இன்மை சராசரியை விட இங்கு அதிகம். இது பற்றி யாரும் அக்கறை கொண்டதாக தெரிய வில்லை. நம் மண்ணில் இயல்பாக கதிர்வீச்சு அல்லது முந்திரி ஆலையின் பாதிப்பு எதுவோ இருக்க வேண்டும் ..
இதன் மூலத்தை கண்டறிய அரசுக்கு மனு அனுப்பியும் பலன் இல்லை. சமீப காலத்தில் இரத்த அழுத்தம் சர்க்கரை நோய், மாரடைப்பு அதிகமாகி வருவது கவலையான செய்தி சில நடவடிக்கைகள் மூலம் விழிப்புணர்வை உருவாக்கி இவற்றை கட்டு படுத்தலாம்.
இதை எல்லாம் யாராவது செய்யட்டும் என்பதைவிட நாமே செய்தால் என்ன?
முதலில் மணல் கொள்ளையில் ஈடுபடும் IRE, வைகுண்டமணி கம்பெனிகளின் கொள்ளைகளை தடுக்கவேண்டும் .. நமது பகுதி கடற்கரை மணலில் கேன்சர் உருவாக்கும் மூலக்கூறுகள் உள்ளதாக கூறப்படுகிறது .. இந்த மணல்களை சில அடி ஆழமாக தோண்டி எடுப்பதாலும் அதனை பிரித்து எடுக்கும்போதும் இந்த கதிர்வீச்சு வெளிப்படுவதாகவும் தெரிகிறது .. இந்த கொள்ளை தொழில் தொடங்குவதற்கு முன்னால் இந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் ஆரோக்கியமுடன் வாழ்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது ..! மேலும் இந்த பகுதிகளில் இயங்கிவரும் பைபர் வள்ளம் என்ற படகு செய்யும் கம்பெனிகள் பயன்படுத்தும் வேதிபொருள்கள் காற்றில் பரவுவதால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்பது பற்றிய ஆய்வும் தேவை ..!
ReplyDelete