Tuesday, 17 April 2012

குளச்சல் மீனவர் மாயம்

குளச்சல் துறைமுகப்பகுதியைச் சேர்ந்தவர் கிராசையன் (80). மீன்பிடித்தொழிலாளி. கடந்த ஏப்.11ம் தேதி இந்தோனேஷியா சுமத்தராதீவில் ஏற்பட்ட பலத்த பூகம்பத்தை தொடர்ந்து தமிழக கடற்கரை பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக் கை விடப்பட்டது.இதையடுத்து குளச் சல் கடற்கரை பகுதி மக்கள் அங்கிருந்து வெளி யேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்ற னர். பீதி விலகியதும் மீண்டும் வீடுகளுக்கு திரும்பினர்.
ஆனால் கிராசையன் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து அவரது மனைவி மெல்சி குளச்சல் போலீ சில் புகார் செய்துள்ளார். போலீசார் மாயமான முதியவரை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment