Tuesday 17 April 2012

மகேந்திரசிங் டோனிக்கு எம்பி பதவி

SEVAI Trust: MS Dhoni to Rajya Sabha : It's all about???
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் டோனியை ஜார்கண்ட் மாநில ராஜ்யசபா தேர்தலில் நிறுத்த ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சி திட்டமிட்டுள்ளது.

ஜார்கண்ட் உள்ளிட்ட 14 மாநிலங்களில் கடந்த 30ம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடந்தது. ஜார்கண்ட் மாநிலத்தில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு 3 சுயேச்சைகள் உள்பட 5 பேர் போட்டியிட்டனர்.
இதனால் அங்கு குதிரை பேரம் கொடி கட்டி பறந்தது. தேர்தலுக்கு முதல் நாள் சுயேச்சை வேட்பாளர் ஒருவரின் உறவினர் காரிலிருந்து ரூ.2.25 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அந்த மாநிலத்தில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. வரும் மே 3ம் தேதி புதிதாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிபுசோரன் கட்சி சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளரே மீண்டும் நிறுத்தப்படுகிறார். முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி தலைமையிலான ஜார்கண்ட் விகார் மோர்ச்சா(ஜேவிஎம்) தரப்பில் வேட்பாளரை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனியை ராஜ்யசபா தேர்தலில் நிறுத்த ஜேவிஎம் திட்டமிட்டுள்ளது. ‘‘ராஞ்சியின் புதல்வன் டோனியை ராஜ்யசபாவுக்கு அனுப்ப முடிவு செய்திருக்கிறோம்’’ என ஜேவிஎம் துணை தலைவரும் முன்னாள் அமைச்சருமான சமரேஷ்சிங் தெரிவித்துள்ளார்.

டோனியை ஆதரிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு மராண்டி கடிதம் எழுதியுள்ளார். ஜேவிஎம் கோரிக்கையை பரிசீலிப்பதாக டோனி உறுதி அளித்திருப்பதாக ராஞ்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment