Tuesday 20 December 2011

நாசரேத் : ஒரு ‘நவீன’ பிச்சைக்காரர் : ரூ.2000 கோல்ட் வாட்ச் : விலை உயர்ந்த செல்போனுடன்

நாசரேத் பகுதியில் தினமும் ஒரு வாலிபர் வருவோர் போவோரிடம் பிச்சை எடுப்பதால் பொதுமக்களுக்கு தொந்தரவு அதிகமாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் கட்டுமஸ்தான உடல்வாகு கொண்ட வாலிபர் ஒருவர் தர்மம் எடுப்பதையே தனது முழுநேர வேலையாகக் கொண்டுள்ளார். நாசரேத் அருகே உள்ள உடையார்குளத்தைச்சேர்ந்த 35 வயது மதிக்க தக்க அந்த வாலிபர் தினமும் காலை 8 மணிக்கு பஸ் ஏறி நாசரேத் வந்துவிடுகிறார்.
வரும்போது சிறிய சூட்கேஸ் ஒன்றையும் எடுத்து வருகிறார். நாசரேத் சந்தி பஜாரில் இறங்கும் அவர் தனது பணியை தொடங்கிவிடுகிறார். ரோட்டில் நின்று கொண்டு வருவோர் போவோரிடம், ரூ.5 கொடு...ரூ.10 கொடு என்று கேட்பார். யாரிடமும் அவர் தர்மம் போடுங்க சாமி என்று கேட்க மாட்டார்.
2 மணி நேரம் அங்கு நின்று கொண்டு பிச்சை எடுக்கும் அவர் அதன்பிறகு தனது எல்கையை மாற்றி அங்குள்ள சிஎஸ்ஐ தேவா லயம் பகுதிக்கு செல்கிறார். அங்குபிச்சை எடுக்கும் அவர் அங் குள்ள ஓட்டல்களில் மதிய உணவை சாப்பிட்டபின் நேராக நாசரேத் பஸ்நிலையம் பகுதிக்கு வருகிறார்.
இரவு 8 மணி ஆனதும் தனது பணியை முடித்துக்கொண்டு பஸ் ஏறி ஊர் சென்று விடுகிறார். மீண்டும் மறுநாள் தனது பணியை வழக்கம்போல் தொடங்கி விடுகிறார். இப்படி ஒரு நாள் இரண்டு நாள் அல்ல.. பல ஆண்டுகளாக அவரது தர்மம் எடுக்கும் பணி தொடர்கிறது. அவர் தற்போது கையில் ரூ.2ஆயிரம் மதிப்புள்ள கோல்ட் வாட்ச் கட்டியுள் ளார். இதுபோல் விலை உயர்ந்த செல்போனும் வைத்துள்ளார். இவரது தினசரி வருமானம் ரூ.300ஐ தாண்டும் என்கிறார்கள்.
பணம் கேட்பது மட்டுமின்றி சிலரிடம் மீன் குழம்பு சாப்பாடு வாங்கி கொடு, மட்டன் சாப்பாடு வாங்கிக்கொடு என்று நச்சரிக்கிறார். இவரது தொல்லை தாங்காமல் பொதுமக்கள் மாற்று வழியாக செல்கிறார்கள்.
‘உனது பெயர் என்ன‘ என்று கேட்டால், முருகன் என்கிறார். உடம்புதான் நன்றாக இருக்கிறதே ஏன் இப்படி பிச்சை எடுக்கிறாய்? என்று யாராவது கேட்டால், அவரிடம் இருந்து வரும் பதில் புன்னகை மட்டும்தான். 
நமது நாடு எல்லாவிதத்திலும் அபரிதமான முன்னேற்ற பாதை யில் சென்று கொண்டிருந்தபோதிலும். பிச்சைக்காரர்கள் மட்டும் காலம் காலமாக அப்படித்தான் உள்ளனர். அரசு கிடுக்கிப்பிடி நடவடிக்கையில் இறங்கினாலும் பிச்சைக்காரர்களை முழுமையாக ஒழிக்க முடிவதில்லை. காரணம் அதில் கிடைக் கும் அதிகப்படியான வருமானம்தான். நாள் முழுக்க ரூ.200, ரூ.300 என்று பார்க்கும் இவர் எப்படி திருந்துவார்கள்? பொதுமக்கள் பிச்சை போடுவதை நிறுத்தினால் மட்டுமே இதை தடுக்கமுடியும்.        (தமிழ் முரசு)

No comments:

Post a Comment