Tuesday, 20 December 2011

மார்த்தாண்டம் : 2-ம் திருமணம் செய்தவருக்கு ஓராண்டு சிறை தண்டனை

மனைவிக்கு தெரியாமல் 2- ம் திருமணம்
குமரி மாவட்டம் களியக்காவிளை அடுத்த மீனச்சல் கிராமத்தை சேர்ந்தவர் சத்யராஜ். இவருக்கும் நித்திரவிளை அடுத்த பாத்திமாபுரத்தை சேர்ந்த கமலாட்சி க்கும் 30.3.1992ல் திருமணம் நடந்தது. கமலாட்சி திருவனந்தபுரம் வேளாண் மை இயக்குனர் அலுவலகத்தில் டைப்பிஸ்ட்டாக வேலை பார்த்து வந்தார். நிரந்தரமான வேலை இல்லாததால், திருமணம் முடிந்து சில மாதங்களில் கணவருக்கு பண உதவி செய்து வெளிநாட்டு வேலைக்கு கமலாட்சி அனுப்பினார். சில நாட்களில் திரும்பி வந்த சத்யராஜ், கமலாட்சியை வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்தார்.
இந்நிலையில், கடந்த 99-ம் ஆண்டு சத்யராஜ், படந்தாலுமூட்டை சேர்ந்த பிரீடா என்பவரை, 2-வதாக ரகசிய திருமணம் செய்து கொண்டார்.
இது குறித்து அறிந்த கமலாட்சி, கணவர் சத்யராஜ், பிரீடா, அவரது தந்தை யானோஸ், கணவரின் உறவினர்கள் ராஜன், ஜெயந்தி, மற்றும் ராபி ஆகியோர் மீது குழித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மாரியப்பன், சத்யராஜூக்கு 1 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ 5 ஆயிரம் அபராதமும், பிரீடாவுக்கு 6 மாத சிறை தண்டனை, ரூ 3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

No comments:

Post a Comment