ஞாயிற்றுக்கிழமை அன்று இயங்கிய, 154 கடைகள், நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை தொழிலாளர் கூடுதல் ஆணையர் சி.சோம்புராஜன், தொழி லாளர் இணை ஆணையர் ஞானசேகரன் ஆகியோர் அறிவுரைப்படி, சென்னை முதல் வட்ட தொழிலாளர் உதவி ஆணையர் க.வீரப்பன் தலைமையில், தொழிலாளர் அலுவலர்கள் சேதுராமன், சேதுமாதவன், உதவி ஆய்வாளர்கள், ரஞ்சனா, அங்கமுத்து, நாககுமார், மணி, அசோக்குமார், ஹேமா, பாலகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர், வடசென்னை பகுதியில் ஜார்ஜ் டவுன், என்எஸ்சி போஸ் ரோடு, பிராட்வே, மண்ணடி, ராயபுரம், பழைய வண்ணாரப்பேட்டை, புதிய வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, கொடுங்கையூர் ஆகியோர் பகுதிகளில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (29ம் தேதி) ஆய்வு செய்தனர்.
அப்போது, விடுமுறை தினத்தில் கடைகள், நிறுவனங்களை மூடாமல் திறந்து வைத்து வியாபாரம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 154 கடைகள், நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், சம்பந்தப்பட்ட கடை, நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது வழக்கு தொடர நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment