Tuesday 31 January 2012

இந்தியா ஒளிர்கிறது : பார்ட்டிக்கு போக வசதியாக நள்ளிரவு குழந்தை காப்பகம்

ஒரு இரவு பராமரிக்க ரூ 750
வாரஇறுதி நாட்களில் கைக் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க, மும்பையில் நள்ளிரவு குழந்தை காப்பகம் தொடங்கப்பட்டுள்ளது.
வேலைக்கு செல்லும் பெற்றோர்களின் குழந்தைகளை கவனிப்பதற்கு பெரு நகரங்களில் காப்பகங்கள் பல உள்ளன என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இரவு நேரத்தில் குழந்தைகளை கவனிப்பதற்கு மும்பையில் "தி மூன்" என்ற பெயரில் காப்பகம் தொடங்கப்பட்டுள்ளது.
வார இறுதியில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவு 7.30 மணி முதல் அதிகாலை 2 மணி வரை இங்கு குழந்தைகள் பராமரிக்கப்படுகிறார்கள். வார இறுதி நாட்களில் பெற்றோர் சினிமா, பார்ட்டி போன்றவற்றில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பதற்கு இந்த நள்ளிரவு காப்பகம் உதவும். குழந்தை ஆலோசகர்கள் மூன்று பேர் சேர்ந்து தொடங்கியுள்ள இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. காப்பகத்துக்கு, ஒரு மாதத்துக்குள் 8 குழந்தைகளாவது வருகின்றனர். ஒரு குழந்தையை ஒரு இரவு பராமரிக்க ரூ 750 வசூலிக்கப்படுகிறது.
குழந்தைகளை கவனிப்பதற்காக தங்கள் மகிழ்ச்சியை தியாகம் செய்து சலிப்பான வாழ்க்கை வாழும் பெற்றோருக்கு இந்த நள்ளிரவு காப்பகம் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இரவு நேரத்தில் பெரும்பாலான குழந்தைகள் தூங்கிவிடும் என்பதால், காப்பகத்தில் குழந்தைகளை கவனிப்பவர்களுக்கும் அதிக தொல்லை இருக்காது.

No comments:

Post a Comment