பல பெண்களை ஏமாற்றினாரா?
இளம்பெண்ணை ஏமாற்றி ஆபாச படம் எடுத்த வேன் டிரைவர் அதை செல்போனில் ஊரெல்லாம் பரப்பி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். அவரை ‘வேறொரு’ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
வள்ளியூர் அடுத்த பணகுடியை சேர்ந்தவர் ‘மிஸ்டர் ரோமியோ’. (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வேன் டிரைவர். இவரது வேனில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த இளம்பெண்கள் தனியார் ஆலைகளுக்கு வேலைக்கு சென்று வருவது வழக்கம். படிப்பு குறைவு என்றாலும் நடித்து கவர்வதில் கில்லாடியான ரோமியோ, தனது வேனில் வந்த ஏழைப்பெண்ணுக்கு வலைவிரித்தார். சுவையான பேச்சு, சின்னச் சின்ன பரிசுகள் கொடுத்து `வறுமையால்‘ வாடிய ஒரு இளம் பெண்ணை வளைத்தார். ரகசிய சந்திப்புகள் தொடர்ந்தன. `கட்டிக்கப்போறவன்தானே!‘ என்றதால் டிரைவரின் எல்லை மீறலுக்கு சம்மதித்தார் அந்தப்பெண். ஆனால் வேன் டிரைவர் வில்லங்கமானவன் என்பதை உணரவில்லை.
`திருமணம் செய்து கொள்ளுங் கள்‘ என்று பலமுறை கேட்டார். ``தொந்தரவு செய்யாதே. நீ என்னுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் என் செல்போனில் உள்ளது. அதை ஊரெல்லாம் பரப்பிவிடுவேன்“ என்று மிரட்டி விரட்டினார். உடைந்து நொறுங் கியவள்... ஒன்றுவிடாமல் பெற் றோரிடம் கொட்டினாள். பதறிய அவர்கள், பணகுடி காவல்நிலை யத்தில் புகார் தெரிவித்தனர். காதலர்கள் வெவ்வேறு சமூகம் என்றதால் பிரச்னை பெரியவர் களால் பேசி தீர்க்கப்பட்டது. போலீசாரோ வில்லங்கமான வேன் டிரைவர் மீது ஆபாச பட சிடிக்கள் வைத்திருந்ததாக கேஸ் போட்டு உள்ளே தள்ளினர்.
விஷயம் முடிந்தது என்றிருந்த நேரத்தில், அவனது `விஷமம்‘ பணகுடி முழுவதும் பரவி பரபரப்புக்குள்ளாக்கி வருகிறது. அதாவது வேன்டிரைவர் அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருந்த காட்சிகள் ப்ளுடூத் வசதியுள்ள செல்போன்களில் இடம்பெற்று வருகிறது. இளைஞர்கள், மாணவர்கள், வியாபாரிகள் என அனைவரும் அந்த காட்சிகளை பார்த்து வருகிறார்கள். விவகாரம் பெண் வீட்டுக்கு தெரியாத நிலையில், வேகமாக பரவி வரும் அந்த காட்சிகளை பரப்பி விட்டவன் யார்? செல்போனின் நுணுக் கங்களை முழுவதுமாக அறியாத வேன் டிரைவரால் அந்த காட்சி களை தனித்து படம் எடுத்திருக்க முடியாது. கூட்டுச்சதி மூலம்தான் `கூத்து‘ படமாக்கப்பட்டுள்ளது.
கூட்டாளிகளின் ஒத்துழைப் புடன்தான் தன்னை நேசித்த பெண்ணை தரம்கெட்டு அவன் படம்பிடித்துள்ளதாக தெரிகிறது. இதன்மூலம் அப்பாவி பெண்களை பலரை ஏமாற்றி படம்பிடித் திருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. `பிட்டப்‘ கேசில் உள்ளே தள்ளப் பட்டுள்ள வேன் டிரைவரை நோண்டி நொங்கெடு த்தால் பல விவகாரங்கள் வெடிக்கும் என்றும் கூறப்படுகிறது. எனவே இந்த விஷயத்தில் மாவட்ட காவல்துறை தலையிட்டு தங்களது அதிரடி விசாரணையை துவக்கினால் சமூக கேடுகளை விளைவித்துவரும் `பலான‘ கும்பல் பிடிபடும் என்பது உறுதி. (தமிழ் முரசு ரிப்போர்ட்)
No comments:
Post a Comment