ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்காவிட்டால் திருப்பி கொடுக்கலாம் என மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த விழாவில் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் பேசினார்.
திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியம் ஆகாரம், மருசூர் ஆகிய கிராமங்களில் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி மற்றும் ஆடுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. கலெக்டர் அன்சுல் மிஸ்ரா தலைமை தாங்கினார். அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், 1013 பயனாளிகளுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், பேன் மற்றும் 41 பயனாளிகளுக்கு ஆடுகளை வழங்கினார்.
அவர் பேசுகையில், ‘முதல்வர் ஜெயலலிதா அனைத்து துறைகளுக்கும் முக்கியத்துவம் அளித்து, அரசு திட்டங்கள் மக்களை நேரடியாக சென்றடையும் வகையில் வழங்கி வருகிறார். நியாய விலை கடைகளில் வழங்கப்படும் ரேஷன் அரிசி தரமில்லை என்றால் திருப்பி கொடுத்துவிடலாம். ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது’ என்றார்.
No comments:
Post a Comment