Monday, 30 January 2012

வேலை நிறுத்தம் : டாக்டர்கள் கையை வெட்டுவேன்

வேலை நிறுத்தம் செய்து பொதுமக்களின் வாழ்க்கையுடன் விளையாடினால், டாக்டர்களின் கையை வெட்டுவேன்” என்று பீகார் அமைச்சர் மிரட்டல் விடுத்துள்ளார்.
பீகார் அரசு மருத்துமனைகளில் பணியாற்றும் ஜூனியர் டாக்டர்கள் உதவித்தொகையை உயர்த்த வலியுறுத்தி, நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளனர். இதை கண்டித்துள்ள இம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே அளித்த பேட்டியில், “அரசு மருத்துவமனைகள் செயல்படுவதை தடுக்க யாருக்கு தைரியும் இருக்கிறது. டாக்டர்கள் வேலை நிறுத்தத்தை அனுமதிக்க மாட்டேன். மீறி வேலை நிறுத்தம் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுப்பேன். பொதுமக்களின் வாழ்க்கையோடு விளையாடினால், பயிற்சி டாக்டர்கள் கையை வெட்டுவேன்” என்று ஆவேசமாக கூறினார்.
டாக்டர்கள் இடையே இதற்கு கடுமையான கண்டனம் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து, தனது பேச்சு விவரத்தை சவுபே நேற்று வாபஸ் பெற்றார்.

No comments:

Post a Comment