Saturday, 21 January 2012

9 மாநில கடலோர பகுதி மக்களுக்கு ஸ்மார்ட் கார்டு

ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் இன்று துவக்கம்
தமிழ்நாடு உட்பட 9 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு "ஸ்மார்ட் கார்டு" வழங்கும் திட்டம் இன்று தொடங்குகிறது.
கடலோர பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக "ஸ்மார்ட் கார்டு" திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் அமல்படுத்துகிறது. இதற்காக ரூ 216.31 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், நாட்டின் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் வசிப்பிடம், தொழில், கல்வி உட்பட பல்வேறு விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களுக்கு �ஸ்மார்ட் கார்டு� வழங்கப்பட உள்ளது.
கடலோர மாநிலங்களான கோவா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள், அந்தமான் நிகோபர், புதுச்சேரி, லட்சத்தீவு, டமான் டையூ ஆகிய 4 யூனியன் பிரதேசங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதற்காக, 3,331 கடலோர கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இங்கு வசிக்கும் மக்களில் இதுவரை 1.2 கோடி பேரின் விவரங்களும், 75 லட்சம் பேரிடம் பயோமெட்ரிக் அடையாளங்களும் (கருவிழி, கை ரேகை) திரட்டப்பட்டு உள்ளன. தற்போது, 5 லட்சம் கார்டுகள் தயாரிக்கப்பட்டு உள்ளன.
இந்த திட்டத்தின் தொடக்க விழா, அந்தமான் தீவில் உள்ள போர்த்ராபூர் கிராமத்தில் இன்று நடக்கிறது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு, "ஸ்மார்ட் கார்டு" வழங்க உள்ளார். இதன் மூலம், தீவிரவாதிகளின் ஊடுருவல் போன்றவை தடுக்கப்படும் என்றும், புதியவர்களின் ஊடுருவலை எளிதாக கண்டறிய முடியும் என்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment