Saturday 21 January 2012

அணுமின்நிலையத்தை மூடக்கோரி பா ஜ உண்ணாவிரதம்

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா ஜ, இந்து முன்னணி சார்பில் உண்ணாவிரத போராட் டம் நடந்தது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோரி இடிந்தகரையில் அணுஉலை எதிர்ப்பாளர் கள் தொடர் உண்ணா விரதம் இருந்து வருகின் றனர்.
பொதுமக்களின் அச்சத்தை போக்க மத்திய அரசு நியமித்த 15 பேர் கொண்ட நிபுணர் குழுவினர், போராட்டக் குழுவினருடன் நடத்திய 3 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
அணுமின்நிலையத்தை நிரந்தரமாக மூடுவதை தவிர வேறு எந்த சமர சத்திற்கும் போராட் டக்குழுவினர் தயாராக இல்லை.
இந்நிலையில் கூடங் குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து நேற்று 95வது நாளாக உண்ணாவிரதம் நடந்தது. பாஜ, இந்து முன்னணியினர் உண்ணாவிரதம் இருந்தனர். கடையடைப்பு போராட்டம் நடந்தது.
கூடங்குளம் விநாயகர் கோயில் திடலில் நடந்த உண்ணாவிரதத்தில் கூடங்குளம் மற்றும் சுற் றுப்பகுதிகளான இடிந்த கரை, கூட்டப்புளி, விஜயாபதி, ஆவுடை யார்குளம், கூத்தன்குழி, பெருமணல், செட்டிகுளம் ஆகிய பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூடங்குளத்தில் 100க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.
இந்து முன்னணி நகர தலைவர் முத்து, செயலாளர் பொன்னுசாமி, பா.ஜ. ஒன்றிய துணை தலைவர் இன்பமுத்துராஜ், கூடங்குளம் பஞ்சாயத்து துணை தலைவர் பகவதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment