Saturday, 21 January 2012

குமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இடம் மாறுகிறது

குமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் நாகர்கோவில் பிரசிடென்ட் சிவதாணு சாலையில் உள்ள ஒரு வாட கை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. புதிய பதிவு, புதுப்பிப்பு, சான்றிதழ் சரிபார்ப்பு, பயிற்சி என பல்வேறு பணிகளுக்காக தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் இங்கு வந்து செல்கிறார்கள். அவர்களுக்கான இருப்பிட வசதி, குடிநீர், கழிவறை வசதிகள் இந்த அலுவலகத்தில் இல்லை. இந்த அலுவலகத் தை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் குமரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ 1.5 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி அலுவலகம் கட்ட இடம் தேர்வு நடந்து வந்தது. தற்போது கோணம் ஐ.டி.ஐ. வளாகத்தில் புதிய வேலைவாய்ப்பு அலுவலகத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக ஐ.டி.ஐ. வளாகத்தில் 25 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை தமிழக தொழி லாளர் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் நேற்று (20-ம் தேதி) ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர் பச்சைமால் உடன் சென் றார். பின்னர் கோணம் ஐ.டி.ஐ. வகுப்பறைகள், பயிற்சி கூடம் ஆகியவற்றையும் அமைச்சர் செல்லப்பாண்டியன் பார்வையிட்டார். அமைச்சர்களுடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ரவீந்திரன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் (கட்டுமான பிரிவு) சண்முகவேல், சுனிதா மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.
ஆய்வுக்கு பின், அமைச்சர் செல்லப்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது : தமிழகத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்க, முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது 10 இடங்களில் புதிதாக ஐ.டி.ஐ. தொடங்க உத்தரவிட்டுள்ளார். வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கும் சொந்த கட்டிடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழிற்கூடங்களை அதிகப் படுத்தி, வேலைவாய்ப்பு பூங்காக்கள் உருவாக்கப்பட்டு படித்து முடித்தவுடன் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற இந்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றார்.
பின்னர் தற்போது வேலை வாய்ப்பு அலுவலகம் செயல்பட்டு வரும் இடத்தையும் அமைச்சர் செல்லப்பாண்டியன் பார்வையிட்டார். அப்போது அங்கு வந்திருந்த மாணவ, மாணவிகள் பல்வேறு புகார்களை கூறினர். ஊழியர்கள் சரியான நேரத்துக்கு பணிக்கு வருவதில்லை. சந்தேகங்கள் கேட்டால் கூட சரியாக பதில் சொல்வதில்லை என்று கூறினர்.
குறிப்பாக ஒரு பெண் ஊழியரை காட்டி பலர் குற்றம் சாட்டினர். இதை கேட்ட அமைச்சர், மக்கள் பணி தான் முக்கியம். ஊழியர்கள் சரியாக பணியாற்றிட வேண்டும். அப்படி பணியாற்றாத ஊழியர்களை இடம் மாற்றம் செய்யுங்கள் என்று வேலை வாய்ப்பு அதி காரியை கேட்டுக் கொண் டார். முன்னதாக நாகர்கோவில் வந்த அமைச்சர் செல்லப்பாண்டியனுக்கு, அமைச்சர் பச்சைமால் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட மாணவரணி செயலாளர் மனோகரன், இளைஞர் பாசறை செயலாளர் சகாயம், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் அசோகன், மீனவரணி செயலாளர் சேவியர் மனோகரன், நாகர்கோவில் நகர செயலாளர் சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாய் பேச முடியாதவர்களுக்கு தனி தொழிற்பயிற்சி கூடம்
அமைச்சர் செல்லபாண்டியனிடம், பத்மனாபபுரம் நகராட்சி தலைவர் சத்யாதேவி குமரி மாவட்டத்தில் வாய் பேசமுடியாத மாணவர்கள் ஏராளமானோர் உள்ளனர். 10-ம் வகுப்பு முடித்த பிறகு அவர்களுக்கு என தொழிற்பயிற்சி கூடம் எதுவும் இல்லை. தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் தான் வாய் பேச முடியாதவர்களுக்கான தனி தொழிற்பயிற்சி கூடம் இயங்குகிறது. அங்கேயும் 2 வருடத்திற்கு ஒருமுறை தான் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். விடுதி வசதியும் இல்லை. எனவே குமரியில் இது போன்ற ஒரு தொழிற்பயிற்சி மையத்தை ஐடிஐ வளாகத்தில் அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் செல்லப்பாண்டியன் உறுதியளித்தார். அப்போது பத்மநாபபுரம் நகர செயலாளர் ஜகபர் சாதிக் உடன் இருந்தார்.

No comments:

Post a Comment