Tuesday 14 February 2012

10-ம் வகுப்பு மாதிரி வினா விடை சிடி பள்ளிகளுக்கு சப்ளை


பத்தாம் வகுப்பு மாணவர்களின் வசதிக்காக பெற்றோர் ஆசிரியர் கழகம் தயாரித்து வழங்கி வந்த மாதிரி வினாவிடை புத்தகம் வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது. இதையடுத்து மாதிரி வினாவிடை அடங்கிய சிடியை அனைத்து பள்ளிகளுக்கும் தேர்வுத்துறை வினியோகித்து வருகிறது.
பொதுத்தேர்வு எழுதும் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்காக, தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் கடந்த 20 ஆண்டுகளாக மாதிரி வினா விடை, தீர்வு புத்தகம் ஆகியவற்றை அச்சிட்டு குறைந்த விலைக்கு விற்று வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு திமுக அரசு சமச்சீர் கல்வியை கொண்டு வந்தது. அந்த பாடத்திட்டம் இந்த ஆண்டு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் ந,டைமுறைக்கு வந்துள்ளது.
இதனால், பத்தாம் வகுப்புக்கான மாதிரி வினா விடை புத்தகம் இந்த ஆண்டு சமச்சீர் கல்வி முறையின் கீழ் தயாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த இரண்டு மாதங்களுக்கு சமச்சீர் கல்வியை அடிப்படையாக கொண்டு புதிய கேள்வித்தாள் வடிவமைக்கப்பட்டது. அது, பள்ளிக்கல்வி இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.
ஆனால், அந்த கேள்வித்தாள் சரியில்லை என்று, மீண்டும் புதியதாக கேள்வித்தாள் மாற்றி அமைக்கப்பட்டது. மாற்றி அமைக்கப்பட்ட கேள்வித்தாள் மாதிரியை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. பள்ளிக் கல்வி இணைய தளம் முடங்கியதால் அதை வெளியிட முடியவில்லை. இதனால் புதிய கேள்வித்தாள் எப்படி இருக்கும் என்று மாணவர்களுக்கு தெரியவில்லை.
இருப்பினும், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் வழக்கமாக அச்சிட்டு வழங்க வேண்டிய மாதிரி வினா விடை புத்தகத்துக்காக அரசு தேர்வு துறை நடவடிக்கை எடுத்தது. ஒவ்வொரு பாட ஆசிரியரையும் கொண்டு மாதிரி வினா விடை புத்தகம் தயாரிக்கப்பட்டது. கணக்கு பாடத்துக்கு தனியாக ஸ்கோர் புத்தகமும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகங்களை அச்சிட்டு வழங்குவதற்கான ஆணை இன்னும் வெளியிடவில்லை. இதனால் பெற்றோர் ஆசிரியர் கழகம் மேற்கண்ட புத்தகங்களை இன்னும் அச்சிடாமல் உள்ளது. இந்த மாத இறுதியில் புத்தகம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், புதிய மாதிரி வினாத்தாள் வடிவமைப்பை அரசு இணைய தளத்தில் நேற்று தான் வெளியிட்டனர். ஆனால், தனியார் இணையதளம் 20 நாட்களுக்கு முன்பே இதை வெளியிட்டுவிட்டது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள நிலையில், மாதிரி வினாத்தாள் எப்படி இருக்குமோ என்ற குழப்பத்தில் மாணவர்கள் தவித்து வருகின்றனர். பெற்றோர் ஆசிரியர் கழகம் புத்தகம் அச்சிட்டு வெளியிட நாளாகும் என்பதால், மாதிரி வினாத்தாள்கள் அனைத்தையும் சிடியாக தயாரித்து அனைத்து பள்ளிகளுக்கும் தேர்வுத் துறை அனுப்பி வருகிறது. அரசுப் பள்ளிகளுக்கு இந்த சிடிக்கள் சென்று சேர்ந்து விட்டன.
பொதுத்தேர்வில் எந்த வடிவில் கேள்விகள் இடம் பெறும் என்பது பற்றிய விளக்கம் அந்த சிடியில் இடம் பெற்றுள்ளன. அந்த சிடிக்கள் ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியருக்கும் கிடைத்ததும், ஒவ்வொரு பாடம் தொடர்பாக இடம் பெற்றுள்ள வினாத்தாளை ஜெராக்ஸ் எடுத்து, அந்தந்த பாட ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். பாட ஆசிரியர்கள் அந்த வினாத்தாளை அடிப்படையாக கொண்டு இறுதி திருப்பத் தேர்வுகளை நடத்த வேண்டும்.
பத்தாம் வகுப்பு கணக்கு பாடத்தை பொறுத்தவரை வினாத் தாள் தவிர �ஸ்கோர் புக்� என்று தனியாக அச்சிட்டு வெளியிட உள்ள நிலையில் இந்த சிடி வினியோகிக்கப்பட்டுள்ளது. அந்த சிடியில் கணக்கு புத்தகத்தில் உள்ள அனைத்து பயிற்சிகளுக்கும், அந்த சிடியில் விடை கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 2 மதிப்பெண் வினாக்கள், 5 மதிப்பெண் வினாக்கள், 10 மதிப்பெண் வினாக்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மாதிரி வினாத்தாளும் இடம் பெற்றுள்ளன. இதுதவிர, ஒவ்வொரு விடைக்கும் மாற்று முறைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. எல்லா பாடங்களுக்கும் இதுபோலவே விடைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட சிடியில் ஒவ்வொரு பாடத்துக்கும் 5க்கும் மேற்பட்ட மாதிரி வினாத்தாள்கள் இடம் பெற்றுள்ளன. இந்த சிடியில் உள்ளதை தாமதம் இல்லாமல் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்கினால் நல்லது.

No comments:

Post a Comment