Tuesday, 14 February 2012

இரயுமன்துறை : எம்.பி.ஏ மாணவர் பைக் விபத்தில் பலி


நித்திரவிளை அருகே உள்ள இரயுமன்துறை குருசடி வளாகத்தை சேர்ந்தவர் கிபின்(24). சென்னையில் முதலாம் ஆண்டு எம்.பி.ஏ படித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு கிபின், அதே பகுதியை சேர்ந்த கிளின்டன் (20) என்பவருடன் தூத்தூரில் இருந்து இரயுமன்துறைக்கு பைக்கில் புறப்பட்டார்.
பூத்துறை பகுதியில் அவர்கள் வரும்போது மின் கம்பத்தில் பைக் மோதியது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். கிபின் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
கிளின்டன் நித்திரவிளையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது பற்றி நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கல்லூரி மாணவர் விபத்தில் பலியானதால் இரயுமன்துறை பகுதியே சோகத்தில் மூழ்கியது.

No comments:

Post a Comment