Tuesday, 14 February 2012

ரூ 25 லட்சம் கோடி கருப்பு பணம் : சிபிஐ பகிரங்க அறிவிப்பு

இந்தியர்களின் கருப்பு பணம் சுமார் 25 லட்சம் கோடி வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்று சி.பி.ஐ இயக்குனர் ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார். இவ்வளவு கருப்பு பணம் பதுக்கப்பட்டிருப்பது குறித்து அரசு தரப்பில் வெளிப்படையாக அறிவிப்பது இதுவே முதல் முறை.
சுவிஸ் வங்கிகளில் இந்திய அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் பலர் கருப்பு பணம் பதுக்கி வைத்திருப்பதாக நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது. சுவிட்சர்லாந்து மட்டுமின்றி, பல்வேறு நாடுகளிலும் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்க வேண்டும் என்று சமீப காலமாக பல்வேறு தரப்பிலும் கோரிக்கை விடப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கும் தொடரப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களின் கருப்பு பணம் ரூ.24.5 லட்சம் கோடி உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை சி.பி.ஐ இயக்குனர் ஏ.பி.சிங் நேற்று வெளியிட்டார். ஊழல் எதிர்ப்பு மற்றும் சொத்து பறிமுதல் தொடர்பான முதலாவது இண்டர்போல் ஆலோசனை கூட்டம், டெல்லியில் நேற்று நடந்தது.
இதில், சி.பி.ஐ இயக்குனர் ஏ.பி.சிங் பேசியதாவது:
இந்தியர்கள் வெளி நாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தின் அளவு குறித்து பல்வேறு கருத்துகள் உலவுகின்றன. 500 பில்லியன் டாலர்(சுமார் ரூ.24.5 லட்சம் கோடி) முதல் 1500 பில்லியன் டாலர் வரை உள்ளதாக பேசப்படுகிறது. ஆனால், அது 500 பில்லியன் டாலர் வரை இருக்கலாம் என்றும், சுவிஸ் வங்கிகளில் பணம் போட்டு வைத்திருப்பவர்களில் இந்தியர்கள்தான் அதிகம் என்றும் தெரிய வந்துள்ளது.
சுவிட்சர்லாந்து மட்டுமின்றி, மொரீசியஸ், லீசெட்டன்ஸ்டின் மற்றும் சில தீவுகளில் உள்ள வங்கிகளிலும் இந்தியர்களின் கருப்பு பணம் பதுக்கப்பட்டிருக்கிறது.
அந்த நாடுகள், கருப்பு பணம் போட்டுள்ளவர்களின் விவரங்களை தெரிவிக்க மறுக்கின்றன. காரணம், அந்த பணத்தால்தான் அந்நாடுகளின் பொருளாதாரம் பெருகுகிறது. அதனால்தான், அங்குள்ள ஆட்சியாளர்களுக்கு தகவல் பரிமாற்றம் செய்யும் துணிவு வருவதில்லை. ஊழல் குறைந்த நாடுகள் என கணிக்கப்பட்ட நாடுகளில் கூட கருப்பு பணம் பதுக்கப்பட்டிருக்கிறது. அந்த வரிசையில் முதலிடத்தில் உள்ள நியூசிலாந்து, 5ம் இடத்தில் உள்ள சிங்கப்பூர், 7ம் இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது.
ஊழல் எதிர்ப்பு, சொத்து பறிமுதல் தொடர்பான முதலாவது இண்டர்போல் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் சி.பி.ஐ இயக்குனர் ஏ.பி.சிங் பேசுகிறார்.
அந்த நாடுகள், கருப்பு பணம் போட்டுள்ளவர்களின் விவரங்களை தெரிவிக்க மறுக்கின்றன. காரணம், அந்த பணத்தால்தான் அந்நாடுகளின் பொருளாதாரம் பெருகுகிறது. அதனால்தான், அங்குள்ள ஆட்சியாளர்களுக்கு தகவல் பரிமாற்றம் செய்யும் துணிவு வருவதில்லை. ஊழல் குறைந்த நாடுகள் என கணிக்கப்பட்ட நாடுகளில் கூட கருப்பு பணம் பதுக்கப்பட்டிருக்கிறது. அந்த வரிசையில் முதலிடத்தில் உள்ள நியூசிலாந்து, 5ம் இடத்தில் உள்ள சிங்கப்பூர், 7ம் இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது.
கருப்பு பணத்தை பதுக்குபவர்கள் அதை ஒரு நாட்டிற்கு பரிமாற்றம் செய்து அங்கிருந்து சங்கிலி போல் வேறு நாடுகளுக்கு கொண்டு செல்கின்றனர். அதனால், அவற்றை கண்டுபிடிப்பதிலும், விசாரணையிலும் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன.
இவ்வாறு ஏ.பி.சிங் பேசினார்.

No comments:

Post a Comment