Tuesday, 14 February 2012

திருவட்டார் : கணவன் வெளிநாட்டில் : இளம்பெண் தற்கொலை


திருவட்டாரை அடுத்துள்ள மாத்தூர் கடுகனூர்விளை பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்(35). இவர் பல வருடமாக வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் தக்கலையை அடுத்துள்ள பிரம்மபுரம் பகுதியை சேர்ந்த ஜாஸ் மின்(31) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு மார்ட்டின்(5) என்ற மகனும், மெர்லின்(2) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் ஜாஸ்மினின் நடத்தை குறித்து ஸ்டீபனிடம் அவரது உறவினர்கள் தவறான தகவல்களை தெரிவித் துள்ளனர். இதன் பின்னர் இவர்கள் வாழ்க்கையில் புயல் வீச தொடங்கியது.
கணவன் மட்டுமின்றி அவரது மாமனார் ஜேம்ஸ், மாமியார் சொர்ணபாய் ஆகியோரும் சேர்ந்து ஜாஸ்மினை கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் மாமனார், மாமியார் இருவரும் ஜாஸ்மினை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஜாஸ்மின் தனது குழந்தைகளுடன் சென்னை யில் பணிபுரியும் தனது தந்தை ஜீவானந்தத்தின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு மனம் உடைந்த நிலையில் இருந்த ஜாஸ்மின் கடந்த 11ம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் கணவரின் ஊரான மாத்தூருக்கு நேற்று காலை கொண்டு வரப்பட்டது.
அப்போது ஊர் பொதுமக்கள், ஜாஸ்மினை தற்கொலைக்கு தூண்டியது அவரது கணவரின் குடும்பத்தினர் தான். இதனால் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது. எனவே ஸ்டீபனின் சொத்துகளை உடனடியாக இரண்டு குழந்தைகளின் பெயருக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அப்படி செய்யா விட்டால் ஜாஸ்மினின் உடலை அடக்கம் செய்ய விட மாட்டோம் என்று கூறி னர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்த அருவிக்கரை ஊராட்சி தலைவர் ஜாண் கிறிஸ்டோபர் மற்றும் திருவட்டார் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இரண்டு குழந்தைகளின் பெயரில் ஸ்டீபனின் சொத்துக்களை உடனடியாக பத்திரப் பதிவு செய்வதென முடிவு செய்யப்பட்டது.
ஸ்டீபன் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் அவரது தந்தை பெயரில் உள்ளது. இதனையடுத்து திருவட்டார் சார் பதிவாளர் அலுவலகத்தில் வைத்து குழந்தைகளின் பெயருக்கு சொத்துக்களை மாற்றி பத்திரப் பதிவு செய்யப்பட்டது. இதன்பின்னர் உடலை அடக்கம் செய்யும் பணி நடந்தது. அப்போது பொதுமக்கள், ஸ்டீபன் தனது மனைவி இறந்த தகவல் அறிந்து வெளி நாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்ததாகவும், உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பதாகவும் கூறினர்.
இதனையடுத்து ஸ்டீபன் உள்ளூரில் இருந்தால், உடல் அடக்கம் செய்யும் இடத் திற்கு வரவேண்டும். அவர் வந்தால் தான் உடலை அடக்கம் செய்ய முடியும் என்று கூறினர். இதனையடுத்து போலீசார் மீண்டும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்ததோடு, ஸ்டீபன் எங்காவது பதுங்கி உள்ளாரா? என தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் ஸ்டீபன் வெளி நாட்டில் இருந்து வரவில்லை என்பது தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து அரிவிக்கரை ஊராட்சி தலைவர் பொதுமக்களிடம் மீண்டும் பேச்சுவார்தை நடத்தினார். அப்போது உடல் கெட்டுப்போகும் நிலையில் இருப்பதால், அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்வோம். அதன் பின்னர் மேற் கொண்டு செய்ய வேண்டி யதை செய்யலாம் என்றார். இதற்கு பொதுமக்கள் உடன்பட்டதை தொடர்ந்து இரவு 8.30 மணியளவில் ஜாஸ்மின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. (Dinakaran)

No comments:

Post a Comment