திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களுக்கான கம்ப்யூட்டர் சயின்ஸ் செய்முறை தேர்வு கடந்த 6ம் தேதி நடந்தது.
இதில் சி 2 வகுப்பை சேர்ந்த பிரதீப், பிரேம் ஆகிய மாணவர்களை ஆசிரியர் தர்மலிங்கம் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. போதுமான வருகைப்பதிவு இல்லை என கூறி இருவரையும் தேர்வு எழுதவிடாமல் தடுத்து விட்டார். தேர்வு எழுதாததால் பிளஸ் 2 பாஸ் ஆக முடியாது என உடன் படிக்கும் மாணவர்களிடம் கூறிவந்தனர்.
இதையடுத்து மாணவர்கள் நேற்று ஆசிரியர் தர்மலிங்கத்தை கண்டித்து பள்ளி முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதற்கிடையில் மாணவர் பிரதீப் நேற்று மாலை வாய்க்கால் மேட்டில் சாணிப்பவுடர் குடித்து மயங்கி விழுந்தார். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment