Saturday, 11 February 2012

சமையல் தகராறு : தூக்கு போட்டுக்கொண்ட இளம் கணவன் மனைவி

சமையல் செய்ய நேரமானதால் ஏற்பட்ட தகராறில் மனைவியை கணவன் அடித்து உதைத்தார். விரக்தியில் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பயத்தில் கணவனும் தற்கொலை செய்து கொண்டார். தாம்பரம் அருகே நடந்த இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தாம்பரம் அடுத்த அகரம்தென் ஊராட்சி சத்யா நகரை சேர்ந்தவர் மணிமாறன் (32). ராயப்பேட்டையில் உள்ள தனியார் பிரின்டிங் பிரஸ்ஸில் வேலை பார்த்தார். மனைவி விஜி (24). இவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ளார். மணிமாறன் காலையில் பணிக்கு சென்றால் இரவில்தான் வீடு திரும்புவார். அதனால் அவருக்கு மதிய சாப்பாடும் செய்து கொடுத்து விடுவார் விஜி. நேற்று காலையில் சாப்பாடு செய்ய நேரமாகி விட்டது. இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
கோபத்தில் மனைவியை அடித்து உதைத்தார் மணிமாறன். பின்னர் வேலைக்கு சென்று விட்டார். அங்கிருந்து மனைவிக்கு போன் செய்தார். மாலை வரை போனை எடுக்கவில்லை. இதனால் பயந்து போன மணிமாறன், மனைவி என்ன ஆனாளோ என தவித்தார். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த மணிமாறன், பிரஸ் உரிமையாளரிடம், ‘மனைவியை அடித்து விட்டேன். அவருக்கு போன் செய்தும் எடுக்கவில்லை. மனதுக்கு கஷ்டமாக உள்ளது, அதனால் சீக்கிரமாக வீட்டுக்கு அனுப்புங்கள்’ என்று கூறியுள்ளார்.
உடனே உரிமையாளர், நானும் தாம்பரம்தான் செல்கிறேன் என்று கூறி மணிமாறனையும் அழைத்து சென்றார். தாம்பரம் சென்றதும் அங்கிருந்து பஸ்சில் வீட்டுக்கு சென்றார் மணிமாறன். கதவை திறந்து உள்ளே சென்றார். அங்கு மின் விசிறியில் விஜி தூக்கு போட்டு பிணமாக கிடந்தார். சடலத்தை பார்த்ததும் கதறி அழுதார். பின்னர் உடலை கீழே இறங்கிவிட்டு கும்பகோணத்தில் உள்ள மாமியார் மாலதிக்கு போன் செய்து விவரத்தை கூறினார்.
‘என் மகளை கொன்று விட்டாயே’ என்று மாலதி கூற, மனம் நொந்திருந்த மணிமாறன், ‘நீங்க வருவதற்குள் நானும் செத்து விடுவேன்’ என்று கூறி போனை துண்டித்தார். இதை கேட்டதும் பதற்றத்துடன் புறப்பட்டார் மாலதி. இன்று காலை மணிமாறன் வீட்டுக்கு வந்தார். கதவு பூட்டியிருந்தது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு மனைவி தற்கொலை செய்து கொண்ட அதே புடவையில் மணிமாறனும் தூக்கில் பிணமாக கிடந்தார். அதை பார்த்ததும் மாமியார் கதறி அழுதார். மணிமாறனின் 2 வயது மகனும் அழுது கொண்டே இருந்தான்.
தாம்பரம் அருகே சோகம்
தாம்பரம் அருகே அகரம்தென் பகுதியில் தற்கொலை செய்து கொண்ட தம்பதி மணிமாறன், விஜி. (பழைய படம்)
‘என் மகளை கொன்று விட்டாயே’ என்று மாலதி கூற, மனம் நொந்திருந்த மணிமாறன், ‘நீங்க வருவதற்குள் நானும் செத்து விடுவேன்’ என்று கூறி போனை துண்டித்தார். இதை கேட்டதும் பதற்றத்துடன் புறப்பட்டார் மாலதி. இன்று காலை மணிமாறன் வீட்டுக்கு வந்தார். கதவு பூட்டியிருந்தது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு மனைவி தற்கொலை செய்து கொண்ட அதே புடவையில் மணிமாறனும் தூக்கில் பிணமாக கிடந்தார். அதை பார்த்ததும் மாமியார் கதறி அழுதார். மணிமாறனின் 2 வயது மகனும் அழுது கொண்டே இருந்தான்.
தகவல் அறிந்து சேலையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். குடும்ப தகராறில் கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment