Saturday, 11 February 2012

சிம்பு & தனுஷ் டுவிட்டர் மோதல்

மறைமுகமாக தாக்கி பேசிக்கொண்டிருந்த சிம்பு & தனுஷ் நேரடியாக மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சினிமாவில் தொழில்போட்டி சகஜம். இப்போதெல்லாம் அது நேரடி மோதலாக மாறி வருகிறது. சமீபத்தில் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் பற்றி பட இயக்குனர் சிரிஸ் குந்தர் டுவிட்டரில் விமர்சனம் செய்து கருத்து தெரிவித்திருந்தார். இதனால் கோபம் அடைந்த ஷாருக் பட வெற்றி விழா ஒன்றில் அவரை தாக்கினார். இதுபாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்படியொரு பரபரப்பு கோலிவுட்டில் ஏற்பட்டிருக்கிறது.
சிம்பு, தனுஷ் இடையே தொழில்போட்டி இருக்கிறது. இந்த மோதல் தற்போது நேரடியாக வெளிப்பட்டிருக்கிறது. ‘கொலை வெறிடி’ பாடலை தொடர்ந்து ‘சச்சின் ஆந்த்தம்’ என்ற இசை ஆல்பத்தை தனுஷ் தயாரித்துள்ளார். முன்னதாக ‘லவ் ஆந்த்தம்’ என்ற இசை ஆல்பத்தை சிம்பு உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.
‘சச்சின் ஆந்த்தம்’ பாடல் யு டியூபில் வெளியிடப்பட்டது. பின்னர் காப்பிரைட் காரணமாக நீக்கப்பட்டது. இதுபற்றி சிம்பு கமென்ட் அடித்ததாக யாரோ தனுஷுடம் புகார் கூறி இருக்கிறார்கள். உடனே தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில்,‘சிலரது துயரம் மற்றவர்களுக்கு சிரிப்பு. மனிதாபிமானம் இல்லாத அவர்களின் தன்மையை பார்க்கும்போது எனக்கும் சிரிப்புதான் வருகிறது. இதுதான் லவ். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்’ என்று கிண்டலாக குறிப்பிட்டிருந்தார். தனுஷ் சட்ட ரீதியாக எடுத்த நடவடிக்கை காரணமாக ‘சச்சின் ஆந்த்தம்’ மீண்டும் யு டியூபில் சேர்க்கப்பட்டது.
இதற்கிடையில் அமெரிக்காவில் ‘லவ் ஆந்த்தம்’ பணியில் பிஸியாக இருக்கும் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தனுஷுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். ‘காப்பி அடிக்கறதுல சைனாவ விட பயங்கரமா இருக்காங்களே’ என்று குறிப்பிட்டிருக்கிறார். ‘லவ் ஆந்த்தம்’ ஆல்பத்தை சிம்பு முதலில் தயாரித்ததை தனுஷ், ‘சச்சின் ஆந்த்தம்’ என்ற பெயரில் காப்பி அடித்ததாக சிம்பு தரப்பு தெரிவிக்கிறது. ஆனால் தனுஷ் விடாப்பிடியாக டுவிட்டரில் பதில் அளித்திருக்கிறார். ‘சச்சின் ஆந்த்தம் ஆல்பத்தை நான் எந்த சம்பளமும் வாங்காமல் செய்து தருகிறேன். தயாரிப்பு மற்றும் ஆடியோ, வீடியோவுக்கு மட்டுமே குறிப்பிட்ட பான நிறுவனம் செலவு செய்திருக்கிறது. உங்களுடைய பிரார்த்தனைக்கு நன்றி’ என்று பதில் தெரிவித்தார்.
உடனே சிம்பு டுவிட்டர் பக்கத்தில் அளித்த பதிலில்,‘இந்த உலகில் யாருமே எதிரிகள் கிடையாது. வெற்றிதான் உங்களை உலகத்துக்கு அறிமுகப்படுத்துகிறது. ஆனால் தோல்வியை உலகுக்கு நீதான் அறிமுகப்படுத்துகிறாய்’ என்று குறிப்பிடிருக்கிறார். இதையடுத்து தனுஷ், சிம்பு தரப்பினரிடையே புகைச்சல் கிளம்பி உள்ளது.

No comments:

Post a Comment