இது குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மேற்கொள்ளப்படும் புதிய பதிவு, புதுப்பித்தல், கூடுதல் கல்வித் தகுதி பதிவு செய்தல் போன்ற பணிகள் அனைத்தும், தற்போது இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான இணையதள முகவரி http://tnvelaivaaippu.gov.in ஆகும்.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் முன்பே பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுள்ளவர்கள், புதுப்பித்தல் மற்றும் கூடுதல் கல்வித் தகுதியைப் பதிவு செய்வதுடன் மட்டுமல்லாமல், தங்களின் பதிவு விவரங்களையும் இணையதளம் வாயிலாக சரிபார்த்துக் கொள்ளலாம்.
பதிவுதாரர்கள் தங்களின் பதிவு விவரங்களில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டியிருந்தால், அதைச் சரி செய்து கொள்ள உரிய சான்றுகளுடன் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பு அலுலகத்தை அணுகி, பதிவு விவரங்களை சரிசெய்து கொள்ளலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment