ஜவாஹிருல்லா (மனித மக்கள் கட்சி):
கூடங்குளம் பகுதியில் யாருடைய தூண்டுதலும் இல்லாமல் தன்னிச்சையாக போராட்டம் நடைபெறுகிறது. அணுமின் நிலையத்தை திறந்தால் மின் தட்டுப்பாடு நீங்கும் என கூறப்படுவது உண்மையல்ல.
ரங்கராஜன் (காங்.):
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும். அதில், 900 மெகாவாட் தமிழகத்துக்கு கிடைக்கும்.
ஜவாஹிருல்லா:
அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களை தாக்கிய இந்து முன்னணியினரை காங்கிரசார் பாராட்டியுள்ளது தவறு.
ரங்கராஜன்:
அங்கு நடந்த சம்பவத்துக்கும் காங்கிரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment