Friday 3 February 2012

தெருஞ்சுகோங்க!!! புருஞ்சுகோங்க!!! பார்த்து நடந்துக்கோங்க!!!

ஏதாவது ஒரு எண்ணிற்கு போனை போடுவது, அதில் பெண் குரல் வந்தால் தொடர்ந்து டார்ச்சர் கொடுக்கும் மன்மத ஆசாமிகள் ஒருபுறம் இருந்தாலும் செல்போன்கள் மூலம் தங்களது வாழ்க்கையை வளமாக்கும் கில்லாடி பெண்களும் உள்ளனர். இந்த சம்பவங்கள் தற்போது குமரியில் வேகமாக அதிகமாக நடைபெறுகிறது.
சம்பவம் நம்பர் :1
கன்னியாகுமரியை சேர்ந்தவர் ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது செல்போனிற்கு கடந்த மாதம் மிஸ்டு கால் வந்துள்ளது. அந்த நம்பரை தொடர்பு கொண்ட போது இளம்பெண்ணின் வசீகர குரல்..... உங்கள் எண்ணில் இருந்துதான் மிஸ்டு கால் வந்தது... ஆமாம் உங்களுக்கு எந்த ஊர்.. எங்கே வேலை செய்கிறீர்கள் என விசாரிப்பு தொடங்கியது.
சில நாளில் இருவரும் வேப்பமூடு ஜங்ஷன் பூங்காவில் சந்தித்தனர். அப்போது அவரது தோழி எனக்கூறிக்கொண்டு மற்றொரு பெண்ணும் அறிமுகமானார். நீண்ட நேரம் நீடித்த பேச்சில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற ரேஞ்சில் பெண்கள் இருவரும் சொக்கும் வார்த்தைகள் ராஜாவை கிறங்க செய்தனர். திடீரென சுதாரித்த ராஜாவிடம் ஒழுங்கா போட்டிருக்கிற நகை பணத்தை தா. இல்லாவிட்டால் பாலாத்காரம் செய்ய முயற்சித்ததாக புகார் தருவோம் என மிரட்டினர். சில நிமிடங்களில் நகை பணம் இடம் மாற பெண்கள் ஜூட். அப்பாவியாய் வந்த வாலிபர் அப்பகுதியில் நின்ற டிரைவர்களிடம் பேசிய போதுதான் தெரிந்தது அவர்கள் இருவரும் விலை மாதர்கள் என்பது.
சம்பவம் நம்பர் : 2
நாகர்கோவிலில் உள்ள கடையில் வேலை பார்க்கும் பெண் ஜாஸ்மின்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஏழை குடும்பத்தை சேர்ந்த அவரது உடைகளை பார்த்தால் மிகவும் காஸ்ட்லியாக இருக்கும். இதனை பார்த்து ஜொள்ளுவிட்ட இளைஞர்களில் 5 பேரை தேர்வு செய்தார் ஜாஸ்மின். ஒருவருக்கு தெரியாமல் ஒருவரிடம் நட்பு கொண்ட ஜாஸ்மின் அவர்களிடம் காதல் வேண்டாம். நட்புடன் பழகுவோம் எனக்கூறினார். தனது கைங்கரியத்தால் 5 பேரிடமும் தனித்தனியாக செல்போன் வாங்கினார். ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி அந்த நேரத்தில் மட்டும் பேசுவதுடன் வார விடுமுறையன்று ஏதாவது ஒருவருடன் சுற்றுலா தலங்களுக்கு டேட்டிங் செல்வதும் வழக்கம். அப்போது விலை உயர்ந்த பொருட்கள் பரிசுகளாக கேட்டு பெற்றுவிடுவாராம்.
இந்நிலையில் வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடைபெற அதற்கு 5 லட்சம் வரை தேவைப்பட்டது. இதையடுத்து நண்பர்களிடம் எனக்கு திருமணம் நடைபெற உள்ளது. எனவே ஒரு லட்சம் அவசரமாக தேவைப்படுகிறது. 6 மாதத்தில் திருப்பி தருகிறேன் எனக் கேட்டு 5 பேரிடமும் தலா ரூ.1 லட்சம் வீதம் 5 லட்சம் வசூலித்தார். பின்னர் ஆண் நண்பர்கள் போன் செய்யும்போது எனது கணவருக்கு நமது நட்பு தெரிந்தால் பிரச்னை ஏற்படும். உங்கள் போன் அம்மாவிடம் உள்ளது அவரிடம் பேசுங்கள் என்றார்.
அவரிடம் பேசியும் பணம் கிடைக்காத வாலிபர்கள் வீடு தேடி வந்தனர். அப்போது தான் ஒருவருக்கு தெரியாமல் ஒருவரிடம் பணம் பெற்றது தெரியவந்தது. பணம் கேட்டவர்களிடம் ஜாஸ்மினின் அம்மா எனது மகள் செட்டில் ஆகிவிட்டாள். இனிமேல் தொந்தரவு செய்தால் போலீசில் உங்கள் மீது புகார் செய்ய வேண்டி வரும் எனக்கூறியுள்ளார். ஷாக் ஆன வாலிபர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி திரும்பி சென்றனர்.
மிஸ்டு கால் காதலில் அப்பாவி பெண்கள் மட்டுமல்ல. அப்பாவி வாலிபர்களும் கூட விழிப்புடன் தான் இருக்க வேண்டும்.  (நன்றி : தமிழ் முரசு)

No comments:

Post a Comment