தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 17 ஆயிரத்து 927 பேருக்கு எச்ஐவி பாதிப்பு உள்ளது என்று மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
எய்ட்ஸ் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பணிகளுக்காக, இந்தியாவின் முதல் சங்கமாக ,தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் 1994ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகிறது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் எச்ஐவி தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 2001ல் எச்ஐவியின் தாக்கம் 1.13 சதவீதமாக அதிகரித்திருந்தது.
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக எச்ஐவி தாக்கம் 0.25 சதவீதமாக குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் 1ம் தேதி கணக்கெடுப்புபடி எச்ஐவி தொற்று கண்டறியப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 17 ஆயிரத்து 927 ஆக உள்ளது. இத்தகவல்கள் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
ஏஆர்டி எனப்படும் கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்களில் மொத்தம் 1 லட்சத்து 94 ஆயிரத்து 276 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில் ஆண்கள் 1,01,124. பெண்கள் 82080. திருநங்கைகள் 700, குழந்தைகள் 10372. ஏஆர்டி சிகிச்சையை ஆரம்பித்தவர்கள் எண்ணிக்கை 96,869 ஆக உள்ளது. இதில் சிகிச்சையில் உள்ளவர்கள் 60,124 ஆவர். இதில் ஆண்கள் 30799, பெண்கள் 25928, திருநங்கைகள் 147, குழந்தைகள் 3250.
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் விழிப்புணர்வு தடுப்பு பணிகளிலும், தரமான சிகிச்சை மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. நம்பிக்கை மையம் என்று பொது வாக அழைக்கப்படும் ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துதல் மற்றும் பரிசோதனை மையங்களின் மொத்த எண் ணிக்கை 1468 ஆக உள்ளது. ஏஆர்டி மையங்கள், இணைப்பு கூட்டு மருத்துவ சிகிச்சை மைய ங்கள், சமூக நலமையங் கள், நலவாழ்வு மைய ங்கள் எச்.ஐ.வியால் பாதிக்கப் பட்டவர்களுக்காக செயல் படுத்தப்படுகிறது. மேலும் எச்ஐவி தடுப்பு பணிகளில் தன் னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. கல்லூரிகளில் செஞ்சுருள் சங்கங் களும் இந்த பணி களில் ஈடுபடுத்தப்படுகிறது. பள்ளிகளில் வளர் இளம் பரு வத்தினருக்கான வாழ் வியல் திறன் கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment