Friday, 20 April 2012

ஐபிஎல் (IPL) : கேட்டி பெர்ரி, பாலிவுட் நடிகர்கள் மீது ஆபாச நடன வழக்கு

ஐபிஎல் துவக்க விழாவில் ஆபாச நடனம் ஆடிய பாலிவுட் நடிகர், நடிகைகள், அமெரிக்க பாப் பாடகி மீது வழக்கு பதிவு செய்யக்கோரிய மனுவுக்கு பதிலளிக்க டிஜிபிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை காந்தி நகரை சேர்ந்த வக்கீல் ஜெபக்குமார் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப். 3ல் சென்னையில் துவங்கியது. துவக்க விழாவில், இந்தி நடிகர்கள் அமிதாப்பச்சன், சல்மான் கான், நடிகைகள் கரினாகபூர், பிரியங்கா சோப்ரா, அமெரிக்க பாப் பாடகி கேட்டி பெர்ரி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் போலிங்கர் ஆகியோர் ஆபாச நடனம் ஆடினர். அதனை போலீஸ் அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். விழா நிகழ்ச்சிகள் டிவியில்பார்த்த பெண்கள், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கிராம கோயில் திருவிழாக்களில் நடன நிகழ்ச்சிகளுக்கு போலீசார் தடை விதிக்கின்றனர். ஐபிஎல் துவக்க விழாவில் ஆபாச நடன காட்சிகளை போலீ சார் தடுக்காதது சட்டவிரோதம். ஆபாசமாக நடனம் ஆடிய இந்தி நடிகர், நடிகைகள் மற்றும் பாப் பாடகி, கிரிக்கெட் வீரர் ஆகியோர் மீது பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதை தடுக்கும் சட்டம், பாஸ்போர்ட் மற்றும் விசா நிபந்தனை, கட்டுப்பாடு மீறல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக டிஜிபி, மதுரை மண்டல ஐஜிக்கு புகார் மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். மனுவை விசாரித்த நீதிபதி ஏ.செல்வம் மனுவுக்கு பதிலளிக்க டிஜிபிக்கு உத்தரவிட்டார். விசாரணையை ஏப்ரல் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment