Friday 20 April 2012

பொதுமக்கள் பூட்டு : அரசு அதிகாரிகள் திறந்தனர் : கிறிஸ்தவ தேவாலயத்தில் போலீஸ் பாதுகாப்புடன் திருமணம்

கிறிஸ்தவ தேவாலயத்தில் ஊர் மக்கள் எதிர்ப்பை மீறி போலீஸ் பாதுகாப்புடன் திருமணம் நடந்தது.
நாகர்கோவில் ராமன்புதூர் கார்மல்நகரில் பரிசுத்த திருக்குடும்ப தேவலாயம் உள்ளது. இங்கு ஊர் நிர்வாகத்திற்கு எதிராக அதே பகுதியை சேர்ந்த அருள்தாஸ் என்பவர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ளார். இந்நிலையில் அருள்தாஸ் மகளுக்கு நேற்று (19.4.2012) திருமணம் நிச்சயமானது. திருமணத்தை கார்மல்நகர் தேவாலயத்தில் நடத்த அவர் ஏற்பாடுகளை செய்தார். ஆனால் தேவாலயத்தில் திருமணம் நடத்த ஊர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து அருள்தாஸ் நாகர்கோவில் சப்-கலெக்டர் வெங்கடேஷிடம் புகார் கொடுத்தார்.
திருமணத்தை ஆலயத்தில் நடத்த சப்-கலெக்டர் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து ஊர் நிர்வாகம் தரப்பில் மதுரை உயர் நிதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் சப்-கலெக்டர் உத்தரவுப்படி ஆலயத்தில் நேற்று காலை திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதனால் ஊர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கார்மல் ஆலயம் முன் அதிகாலையில் திரண்டனர். இதையடுத்து தாசில்தார் ராமசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதை பார்த்ததும் ஆலய கதவை பொதுமக்கள் மூடி பூட்டு போட்டனர்.
திருமணத்திற்காக மணமக்களின் உறவினர்கள் தேவாலய வளாகத்திற்கு வரத் தொடங்கினர். பதட்டத்தை தவிர்க்க போராட் டம் நடத்திய பெண்கள் மற்றும் இளைஞர்களை சுமார் 30 பேரை போலீசார் கைது செய்து நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் தேவாலய கதவில் போடப்பட்ட பூட்டை உடைத்து அனைவரும் உள்ளே சென்றனர். பிஷப் பீட்டர் ரெமிஜியூஸ் திருமணத்தை நடத்தி வைத்தார். திருமணத்தை முன்னிட்டு ஆலயம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. திருமணம் முடிந்ததும் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

1 comment:

  1. Please provide correct info in the blog. What you have mentioned here is not correct. The management which is managing the church is cheating people by giving wrong information to the people and not adhering to the Canonical law which should be accepted by the Roman Catholic Churches all over the world. Even they have changed the name board of the church with their Trust name which not many people who are the member of the church are aware of...

    ReplyDelete