Thursday, 7 June 2012
Wednesday, 6 June 2012
A Doctor : really a dedicated Human : 1 Rupee Dam
Anil Joshi had a clinic here since 1994 and knew most of the gaonwallahs. “Some of my patients were farmers who obtained 100-200 quintals of food grain during harvesting season but after eight years of meager rains, they were in a very bad situation and had to buy food grain to feed their family,” says 39-year-old Joshi. The situation was so bad that patients couldn’t pay his fee either.
As a resident of Mandsaur, (the district HQ) Joshi has seen better days when rains were sufficient and farmers harvested enough to sustain their families. Things had taken a turn for the worse after 1999 as rainfall began to decrease.In 2008, the village faced its worst drought and water scarcity.
Tuesday, 5 June 2012
மத்திய அரசு கூடுதல் வரி திட்டத்தால் டீசல் கார் விலை உயரும்?
டீசல் கார் மீதான உற்பத்தி வரியை அதிகரிப்பது குறித்து நிதியமைச்சகம் பரிசீலித்து வருகிறது. வரி உயர்வு பற்றி விரைவில் முடிவெடுக்கப்படும் என்று மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரிய தலைவர் எஸ்.கே.கோயல் நேற்று தெரிவித்தார்.
டீசல், சமையல் காஸ், மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கு மத்திய அரசு மானியம் அளித்து வருகிறது. அப்படியிருந்தும் டீசலின் விலையில் லிட்டருக்கு ரூ 15.35 வரை இழப்பு ஏற்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளன. எனவே, டீசல் கார்களின் விலை அதிகரித்தால், அதன் விற்பனை குறையும். அதன் மூலம், டீசல் பயன்பாடு குறையும் என மத்திய அரசு கருதுகிறது.
டெங்குவை தொடர்ந்து பரவுகிறது சிக்குன் குனியா!
தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மாதம் டெங்கு காய்ச்சல் முதலில் பரவத்தொடங்கியது. இதனை தொடர்ந்து கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை திருச்சி, கோவை, சேலம் உட்பட பல மாவட்டங்களுக்கு டெங்கு வேகமாக பரவி வருகிறது. இதுவரை 2,000 பேருக்கு டெங்கு அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது. சுமார் 300 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குழந்தைகள் உட்பட சுமார் 40க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். மேலும் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
Saturday, 2 June 2012
"கொடுமைக்கார மனைவியுடன் கணவன் எப்படி முழு மனதுடன் வாழ முடியும்?" : ஐகோர்ட் நீதிபதிகள் தீர்ப்பு
"கொடுமைக்கார மனைவியுடன் எந்த கணவனால் தான் சேர்ந்து முழு மனநிலையுடன் வாழ முடியும்? மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று குடும்ப நல நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது" என்று ஐகோர்ட் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
ஜாமீன் வழங்க ரூ 5 கோடி லஞ்சம் வாங்கிய நீதிபதி
ரூ 5 கோடி லஞ்சமாக பெற்றுக் கொண்டு கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் வழங்கிய சிபிஐ சிறப்பு நீதிபதி அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ஆந்திரா & கர்நாடகா எல்லையில் ஓபுலாபுரம் சுரங்க நிறுவனம் கர்நாடக முன்னாள் அமைச்சர்களான ஜனார்த்தன ரெட்டி, கருணாகர ரெட்டிக்கு சொந்தமானது. சுரங்க நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக ஜனார்த்தன ரெட்டி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு ஐதராபாத் சிறையில் அடைக்கப்பட்டார்.
Subscribe to:
Posts (Atom)