Sunday 4 December 2011

ஐபிஎல் சீசன் 5 : ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ராகுல் டிராவிட் கேப்டன்

ஐபிஎல் டி20 2012 தொடருக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக தொடர்ந்து 4 சீசனில் பொறுப்பு வகித்த ஆஸ்திரேலிய சுழல் நட்சத்திரம் ஷேன் வார்ன், 2011 சீசனுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரது தலைமையிலான ராஜஸ்தான் அணி 2008ல் நடந்த முதலாவது ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
முதல் 3 சீசனிலும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடிய ராகுல் டிராவிட், இந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ரூ.2.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஷேன் வார்ன் ஓய்வு பெற்றதால், ஐபிஎல் சீசன் 5 தொடருக்கான புதிய கேப்டனாக ராகுல் டிராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நியூசிலாந்தின் ராஸ் டெய்லர், ஜோகன் போத்தா (தெ.ஆப்ரிக்கா), பால் காலிங்வுட் (இங்கிலாந்து), ஷேன் வாட்சன் (ஆஸி.) ஆகியோரது பெயர்களும் பரிசீலிக்கப்பட்ட நிலையில் அதிக ஆதரவுடன் டிராவிட் தேர்வு செய்யப்பட்டதாக ராயல்ஸ் அணி நிர்வாகி ரகு அய்யர் நேற்று தெரிவித்தார்.
2011 சீசனில் ராஜஸ்தான் அணிக்காக 12 போட்டிகளில் விளையாடிய டிராவிட் 343 ரன் (சராசரி 31.18) எடுத்தார். தற்போது நல்ல பார்மில் உள்ள டிராவிட், டெஸ்ட் போட்டிகளில் அபாரமாக விளையாடி ரன் குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.  

No comments:

Post a Comment