பஸ், ரயில், பொது இடங்களில், இப்படி ஒரு பிட் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். ஆட்கள் தேவை. இந்திய அரசு நிறுவனத்தில் பகுதி நேர வேலைக்கு ரூ.8,000 சம்பளம், முழு நேர பணிக்கு ரூ.12,000, ஞாயிறு மட்டும் ரூ.5,000 சம்பளம். வயது, கல்வி தடையில்லை� என்று கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்யப்பட்டிருக்கும்.
அந்த விளம்பரத்தை பார்த்து போனால் என்ன நடக்கும் தெரியுமா...? ஏமாந்தவர்கள் எவ்வளவு பேர் தெரியுமா...? இதோ ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்.
ஞாயிறு மட்டும் வேலை பார்த்தால் அஞ்சாயிரமா என்று நாமும் ஒரு விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு சென்று பார்த்தோம்.
அங்கு, நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஒரே ஹாலில் அமர வைக்கப்பட்டிருந்தனர். முதலில் அட்மிஷன் பீஸ் என்று கூறி ரூ.20 வாங்கப்பட்டது.
பேச்சு திறமை மிக்க ஒரு நிர்வாகி இனிக்க, மணக்க, ருசிக்க பேசினார். அவர் பேசப்பேச இளைஞர்கள் முகம் பிரகாசம் அடைந்தது. ஏதோ அப்போதே தாங்கள் டாட்டா பிர்லா ஆகிவிட்டதாக பரவசம் அடைந்தார்கள் சிலர். அப்போது அந்த நிர்வாகி, அடுத்த அஸ்திரத்தை ஏவினார். �ரூ.4,000 கட்டினால் போதும், எந்த வேலையும் பார்க்க வேண்டியதில்லை. போன் மூலம் எஸ்.எம்.எஸ். செய்து, வேலை தேடும் இளைஞர்களை இங்கு வரவைக்க வேண்டும். ஒரு ஆள் எத்தனை ஆட்களை சேர்த்து விடுகிறாரோ? அதற்கு தகுந்த கமிஷன் தரப்படும்� என்றார். அத்துடன் கூட்டம் நிறைவடைந்தது.

3 நாட்களுக்கு பிறகு மீண்டும் அங்கு சென்று பார்த்தோம். சிலர் ரூ.4,000 கட்டிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களிடம் கேட்டதற்கு, �ரொம்ப கஷ்டப்பட்டு வீட்டில் இருக்கும், கொலுசு, பழைய பாத்திரங்கள், பட்டுப் புடவையை விற்று காசு புரட்டினோம். எல்லாம் ஒரு நம்பிக்கையில்தான்� என்றனர். சிலர் பெற்றோருடன் வந்தும் பணம் கட்டினார்கள்.
சரி... அப்படி பணம் கட்டி சேர்ந்தவர்கள் நல்ல சம்பாதிக்கிறார்களா என்றும் விசாரணை மேற்கொண்டோம். பணம் கட்டிய சிலரை நண்பர்களாக்கிக் கொண்டு, அவர்களின் செல்போன் நம்பரை வாங்கி அவ்வப்போது விசாரித்தோம். நிஜமாகவே அவர்கள் பாவம்தான். பணம் கொடுத்து ஏமாந்ததுதான் மிச்சம்.
சூளைமேட்டை சேர்ந்த முருகன் என்பவர் கூறுகையில், �ஒரு மெம்பரை சேர்ப்பதற்கு படாத பாடு பட வேண்டியிருக்கிறது. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என எஸ்.எம்.எஸ். பண்ணிக் கொண்டே இருக்கிறேன். ஒரு மாதத்தில் குறைந்தது இருபது பேரையாவது சேர்த்து விட்டால்தான் மாசம் இரண்டாயிரம் ரூபாயாவது கிடைக்கும். ஆனால் இதில் என்ன கொடுமை என்றால் இரண்டு பேரை சேர்ப்பதுகூட முடியாத காரியம். கைக்காசை போட்டு பிட்நோட்டீஸ் அடித்து, பசை வாங்கி, பகல் இரவு என்று நானே ஒட்டிக் கொண்டிருக்கிறேன். யாராவது போன் செய்து வரமாட்டார்களே என காத்திருக்கிறேன். கொடுத்த காசை திருப்பவே இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது என்றார்.
இவரைப் போல்தான் மற்றவர்களும் இருக்கிறார்கள். கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டால் அடியாட்களால் தாக்குவதாகவும் ஏமாந்தவர்கள் கூறுகிறார்கள். இதைப் போன்று அப்பாவி இளைஞர்களை குறிவைத்து அவர்களின் நம்பிக்கையோடும், எதிர்காலத்தோடும் விளையாடும் திருட்டுக் கும்பல்களை காவல் துறை களையெடுத்தால் தான் நல்லது. இருப்பினும் இளைஞர்களும் சற்று உஷாராகத்தான் இருக்க வேண்டும். (தினகரன்)
No comments:
Post a Comment