Monday, 6 February 2012

பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் மேலும் 3 நாட்கள் அனுமதி


பெரிய நடிகர்கள் நடித்த படங்களை ஆண்டுக்கு ஐந்து விழா நாட்களில் மட்டும் ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற முடிவை தயாரிப்பாளர் சங்கம் மாற்றியுள்ளது.
"சிறுபட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை. பெரிய நடிகர்கள் மற்றும் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படங்களுக்கு மட்டுமே தியேட்டர் கிடைக்கிறது" என்று சிறுபட்ஜெட் பட தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கூறி வந்தனர். இதையடுத்து பெரிய பட்ஜெட் படங்கள் விழா நாட்களான பொங்கல், தீபாவளி, தமிழ் புத்தாண்டு, மே தினம், சுதந்திர தினம் ஆகிய ஐந்து நாட்கள் மட்டுமே ரிலீஸ் செய்யலாம் என்றும் மற்ற எந்த நாட்களிலும், விழா நாட்களில் தியேட்டர் கிடைத்தால் அப்போதும் சிறுபட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்துகொள்ளலாம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது.
ஆனால் பெரிய பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்ய, இன்னும் கூடுதல் நாட்கள் வேண்டும் என்று பெரிய தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட ஐந்து நாட்களுடன் கூடுதலாக மார்ச், ஜூன் மற்றும் டிசம்பர் என மேலும் 3 நாட்களில் அப்படங்களை ரிலீஸ் செய்துகொள்ளலாம் என சங்கம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து ரிலீசுக்கு ரெடியாக உள்ள "3" "சகுனி" ஆகிய படங்கள் அடுத்த மாதம் வெளியாகும் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment