Saturday 7 January 2012

செல்போன் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கும் பில் : ரூ 50 க்கு மேல்

செல்போனில் பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் இனி விரிவான பில் பெறலாம் என்று டிராய் அறிவித்துள்ளது. இதற்கு அதிகபட்சம் ரூ 50 கட்டணம்.
இதுபற்றி தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான "டிராய்", வாடிக்கையாளர் பாதுகாப்பு விதிமுறைகள் 2012ல் கூறியிருப்பதாவது:
செல்போன் பிரீபெய்டு வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் வகையில் போன் நிறுவனங்கள் விரிவான பில் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சம் ரூ 50 கட்டணத்தில் வாடிக்கையாளர் இதை விண்ணப்பித்து பெறலாம். விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் போன் நிறுவனம் பில் அளிப்பது கட்டாயம். கட்டணம் செலுத்தி பெறும் அழைப்புகள் விவரம், நேரம், நிமிடங்கள், கட்டணம் ஆகிய விவரங்கள் மட்டுமின்றி வாடிக்கையாளரின் கட்டண திட்டம், கணக்கில் மீதமுள்ள தொகை, மதிப்பு கூட்டு சேவை விவரம் ஆகியவற்றை இலவசமாகவும் போன் நிறுவனம் அளிக்க வேண்டும் என்று டிராய் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர் வசதிக்காக கட்டண வவுச்சர்களும் 3 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ப்ளான், டாப் அப் மற்றும் ஸ்பெஷல் டேரிப் ஆகியவை அவை. இதனால், ஏராளமான கட்டண திட்டங்கள், டாப் அப் ப்ளான்கள் வாடிக்கையாளரை குழப்புவதில் இருந்து விடுதலை கிடைக்கும்.

No comments:

Post a Comment