Saturday 7 January 2012

இந்தியாவில் காய்கறி விலை குறைவு : அமெரிக்க மாணவிகள் பேட்டி

கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் நேற்று அமெரிக்க மாணவ, மாணவிகள் ஆய்வு நடத்தினர்.
அமெரிக்காவின் இதாக நகரில் அமைந்துள்ள கார்னல் பல்கலைக் கழகத்தை சேர்ந்த நார்ப்பொருள் அறிவியல் துறை, வேளாண்மை திட்டங்கள் மேம்படுத்தும் துறை, பூக்கள் விற்பனை மேம்படுத்தும் துறை, விளைபொருட்களின் தர மேம்பாட்டு துறை உள்ளிட்ட 4 துறைகளை சேர்ந்த 30 மாணவ, மாணவிகள் மற்றும் 6 பேராசிரியர்கள் கடந்த 2ம் தேதி முதல், வரும் 17ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.
நேற்று முன்தினம் கோவை வேளாண்மை பல்கலைக்கு வந்த இவர்கள் அங்கு அனைத்து துறைகளையும் பார்வையிட்டனர். சர்வதேச வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி என்ற பாடத் திட்டத்தை அடிப்படையாக கொண்ட ஆய்வு பயிற்சிக்காக நேற்று காலை கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் ஆய்வு மேற்கொண்டனர்.
இப்பயிற்சியில் உழவர் சந்தையில் என்னென்ன காய்கறிகள், பழங்கள் உள்ளன. காய்கறிகளை எவ்வாறு விற்பனை செய்வது, உழவர்கள் எப்படி நுகர்வோரிடம் நேரிடையாக காய்கறிகளை விற்பனை செய்கின்றனர். காய்கறிகளின் தரத்தினை எவ்வாறு அறிவது, எந்தெந்த காய்கறிகளுக்கு எவ்வளவு விலை நிர்ணயம் செய்வது, மற்ற விற்பனை மையங்களைவிட உழவர் சந்தையில் எப்படி குறைந்த விலையில் காய்கறிகளை விற்பனை செய்கின்றனர்.
இதனால் விவசாயிகளுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கிறது, உழவர் சந்தைக்கு நாள்தோறும் எத்தனை நுகர்வோர் போன்ற பல்வேறு விவரங்களை கேட்டறிந்தனர்.
ஆச்சரியமாக இருக்கு...
கார்னல் பல்கலை. மாணவிகள் சூசன்னா, ஜெசிகா, எலிசபெத், ஜோகில் ஆகியோர் கூறியதாவது:
அமெரிக்காவில் உள்ள கடைகளில் இந்தியாவில் உள்ளது போல விவசாயிகள் நேரடியாக வந்து காய்கறிகளை விற்பனை செய்ய மாட்டார்கள். ஒவ்வொரு காய்கறிக்கும் தனித்தனி கடைகள் இருக்கும். ஆனால், இங்கு உழவர் சந்தையில் ஒரே கடையில் பல்வேறு காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.
அத்தனையும் புதுசாக (ப்ரெஷ்) உள்ளது. ஆனால், அமெரிக்காவில் பதப்படுத்தப்பட்டுதான் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் காய்கறிகளின் விலையை காட்டிலும், அமெரிக்காவில் காய்கறிகளின் விலை அதிகளவில் உள்ளது.
இவ்வாறு மாணவிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment