Saturday, 7 January 2012

உம்மன்சாண்டி : முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுப்பாடு தமிழகத்திற்கு வழங்கப்படாது

திருவனந்தபுரத்தில் கடந்த 4ம் தேதி முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் கேரள அமைச்சரவை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதன் பின் முதல்வர் உம்மன்சாண்டி நிருபர்களிடம் கூறுகையில், “முல்லை பெரியாறில் புதிய அணை கட்டும்போது அந்த அணையின் கட்டுப்பாடு தமிழ்நாட்டிற்கும் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அணையின் கட்டுப்பாட்டை கேரளா, தமிழ்நாடு மற்றும் மத்திய அரசு ஆகியவை கூட்டாக ஏற்கும். இது குறித்து உச்சநீதிமன்ற அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவில் 6ம் தேதி(நேற்று) அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் கூறினார்.
உம்மன்சாண்டியின் இந்த பேச்சுக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர் கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சியும் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தனது கருத்துக்கு எதிர்ப்பு அதிகரித்தை தொடர்ந்து முதல்வர் உம்மன்சாண்டி, அணைக்கு கூட்டு கட்டுப்பாடு குறித்து எதுவும் கூறவில்லை என்று பல்டி அடித்தார். இது தொடர்பாக அவர் கொச்சியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
முல்லை பெரியாறில் புதிய அணை கட்டும்போது அணையின் கட்டுப்பாட்டை தமிழ்நாட்டிற்கும் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானித்திருப்பதாக அனைத்து பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டுள் ளன. ஆனால் நான் அவ்வாறு கூறவே இல்லை. புதிய அணை கட்டும் போது அணையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவு தொடர்பான கட்டுப்பாடு குறித்துத்தான் நான் கூறியிருந்தேன். சிறுவாணி, பரம்பிக்குளம் ஆழியாறு ஆகிய அணைகளிலும் இதே போல்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதை மேற்கோள்காட்டியே கூறினேன். ஆனால் பத்திரிகைகள் தவறாக அணையின் கட்டுப்பாட்டை தமிழ்நாட்டிற்கு வழங்கப்போவதாக நான் கூறியதாக பிரசுரித்து விட்டன. புதிய அணை கட்டினால் அணையின் கட்டுப்பாடு முழுக்க முழுக்க கேரளாவிடம்தான் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment